ஆலகாலம் – திரை விமர்சனம்

கிராமத்து ஏழைத்தாயின் ஒரே மகனான நாயகன் ஜெயகிருஷ்ணா சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் படிக்கிறார். படிப்பு முடிந்ததும் தங்களது நிலை மாறிவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் ஜெயகிருஷ்ணாவின் தாய் ஈஸ்வரி ராவ். இதற்கிடையே ஜெயகிருஷ்ணாவின் நேர்மையான கேரக்டர் பார்த்து சக மாணவி சாந்தினி காதலாகிறார். சாந்தினியின் காதலை ஜெயகிருஷ்ணாவும் ஏற்றுக் கொள்கிறார். தாயிடம் அப்புறம் சொல்லிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் திருமணமும் செய்கிறார். இதன்பிறகு ஜெயகிருஷ்ணாவின் வாழ்வில் நுழையும் வஞ்சகமும் சூழ்ச்சியும் அவரை மதுப்பழக்கத்திற்கு அடிமையாக்கி விடுகிறது. இதனால், ஒரு தாயின் கனவும், ஒரு இளைஞனின் லட்சியமும் எப்படி சின்னாபின்னமாகிறது என்பதை நெகிழ்ச்சி பொங்க சொல்வது தான் இந்த ‘ஆலகாலம்’. நாயகனாக ஜெய கிருஷ்ணமூர்த்தி, கதாபாத்திரமாக மாற ஆரம்பத்தில் தடுமாறினாலும், போகப்போக கதையின் நாயகனாக தன்னை நிலைநிறுத்தி விடுகிறார். குடிக்கு அடிமையான பிறகு இவரது நடிப்பு வேறு…

Read More

’மான் கராத்தே’ இயக்குநருடன் கை கோர்க்கும் அருண் விஜய்

  தமிழ் திரையுலகில் கால் பதித்து, பல வித்தியாசமான படங்களைப் பிரம்மாண்டமாகத் தயாரித்து வரும், BTG Universal நிறுவனம் தனது மூன்றாவது படத்தை துவக்கியுள்ளது. முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிக்கும் இப்படத்தை, மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்குகிறார். BTG Universal நிறுவன தலைவர் திரு.பாபி பாலச்சந்திரன் தயாரிக்கும் இப்படத்திற்கு, BTG Universal நிறுவன தலைமை திட்ட இயக்குநர் டாக்டர் M.மனோஜ் பெனோ அனைத்து நிர்வாக பணிகளைகளையும் செய்கிறார். பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தின் துவக்கவிழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னணி நட்சத்திர இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தியதுடன், கிளாப் அடித்து படத்தினை துவக்கி வைத்தார். டேட்டா பிரைவசி ஸ்பேஸ், சைபர் தடயவியல், உட்பட மென்பொருள் துறையில் உலகளாவிய அளவில் ஜாம்பவானாகக் கோலோச்சும் திரு.பாபி பாலச்சந்திரன்,…

Read More