தமிழகத்தின் ஏழை வேட்பாளர் குவியும் ஆதரவு

தமிழகத்தைக் குடிசை இல்லா மாநிலமாக மாற்றுவோம் என அரசியல் கட்சிகள் சொல்லி வருகின்றன.  ஆனால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரே குடிசை வீட்டில் வாழ்ந்து வருவது  தெரியவந்துள்ளது. கோடிக்கணக்கில் சொத்து இருப்பதாக வேட்புமனுவில் கணக்குக் காட்டும்  வேட்பாளர்கள் மத்தியில் மிகவும்  எளிமையான ஒரு வேட்பாளரைக் களமிறக்கியிருக்கிறது  ஒரு தேசியக் கட்சி. 2021 சட்டமன்ற தேர்தலையொட்டி, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள  இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.  விவசாயத் தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள் அதிகம் உள்ள தொகுதியாக திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதி சிபிஐக்கு ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதியிலிருந்து மாரிமுத்து என்பவர் போட்டியிடுகிறார். தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்  மாரிமுத்து. அதில், ’அவருக்கு 75 சென்ட் நிலம்  உள்ளது. அதன் மதிப்பு ரூ.1.75 லட்சம். கையில் இருக்கும் ரொக்கப் பண மதிப்பு ரூ.3000.  மனைவி…

Read More