களத்தில் போட்டி வேட்பாளர் நேரில் மரியாதை நெகிழ வைத்த வேட்பாளர்கள்

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்ட போது கைகுலுக்கியது இரு கட்சியினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வரவிருக்கும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணனும், காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்த்தும் போட்டியிடவுள்ளனர்.  கன்னியாகுமரியில் பாஜக வெற்றி பெறுமா? காங்கிரஸ் வெற்றி பெறுமா? என கடுமையான போட்டி நிலவி வருகிறது.  விஜய் வசந்த்துக்குக்  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும்,  பொன் ராதாவுக்கு  உள் துறை அமைச்சர் அமித்ஷாவும் வாக்கு சேகரித்தனர். இதனால் கன்னியாகுமரி மக்களவை தொகுதியின் தேர்தல் முடிவுக்கு எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது. இந்நிலையில், நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வுக்குக்  கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தார் பொன் ராதாகிருஷ்ணன். அதுபோன்று விஜய் வசந்த்தும் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார்.…

Read More

ஹெலிகாப்டர் பயணத்திற்கு வாய்ப்பு வழங்கியது மக்கள் தான் – கமல்ஹாசன்

நான் ஹெலிகாப்டரில் பறப்பதற்கு மக்கள்தான் காரணம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். முதன்முறையாகத் தேர்தலில் களம் இறங்கும் கமல் கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில தினங்களாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது நானும் குடும்ப அரசியல் தான் செய்கிறேன் என தன் வழக்கமான பேச்சில் மக்களைக் குழப்பிய கமல், பின் மக்கள் தான் என் குடும்பம் என கூறி கொங்கு மக்களின் ஆதரவைப் பெற்று வருகிறார். இந்நிலையில், கமல் தேர்தல் பிரச்சாரத்துக்கு ஹெலிகாப்டர் பயன்படுத்துவது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்தன. இதுதொடர்பாக இன்று விளக்கமளித்துள்ள கமல், “நான் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தவன் தான். எனக்கு ஹெலிகாப்டர் ஒன்றும் தேவையில்லை. என்னை ஹெலிகாப்டரில் போக வைத்ததே மக்கள் தான். அதற்காகத்…

Read More