மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு கொரானா தொற்று

தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. பிரச்சாரம், வேட்பு மனுத் தாக்கல், பொது மக்களைச் சந்தித்தல் என அரசியல் கட்சியினர் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். இதனால் பொது இடங்களில் மக்கள் அதிகளவு கூடும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரானா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு மீண்டும் ஆயிரத்தை நெருங்கியிருக்கிறது. நேற்று மட்டும் 989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 394 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதுபோன்ற சூழலில் தமிழகத்தில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. வேட்பாளர்கள் வீடு வீடாக, வீதி வீதியாகச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், வேளச்சேரி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக வேளச்சேரி தொகுதியில் விருப்ப ஓய்வு பெற்ற மூத்த…

Read More

பினராயி விஜயனை எதிர்க்க பயப்பட்ட காங்கிரஸ் தலைவர்கள்

கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், கண்ணூர் மாவட்டம் தர்மடம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் மாநில பாஜக முன்னாள் தலைவர் சி.கே.பத்மநாபன் நிறுத்தப்பட்டுள்ளார். ஆனால், காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பில் மட்டும்  தாமதம். மனுத் தாக்கலுக்கு இன்று (மார்ச் 19) தான் கடைசி நாள் எனும் நிலையில், நேற்று (மார்ச் 18) மதியம்வரை காங்கிரஸ் கட்சியின் சார்பில் தர்மடம் தொகுதியில் யார் வேட்பாளர் என்பதை அக்கட்சி மேலிடம் அறிவிக்கவே இல்லை. கேரளப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் செயல்தலைவர் கே. சுதாகரனை தர்மடம் தொகுதியில் போட்டியிடுமாறு மாநிலத் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் அவரிடம் பேசினார். முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, ரமேஷ் சென்னிதாலா ஆகியோரும் அவரிடம் தர்மடத்தில் நிற்குமாறு பேசிப் பார்த்தனர். மாவட்ட நிர்வாகிகளும் தொகுதியில் உள்ள காங்கிரஸ் கூட்டணிக் கட்சியினரும்கூட சுதாகரனிடம் இது…

Read More