சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் ‘அகோரி’.

தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் இல்லம் தேடி மக்கள் மனதில் அமர்ந்திருக்கும் ஒரு நடிகராக வளர்ந்திருப்பவர் சித்து.இவர் நடித்த திருமணம், ராஜா ராணி போன்ற தொடர்கள் மிகவும் புகழ் பெற்றவை. இவர் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘அகோரி’.இதுவரை சின்னத்திரை மூலம் தனது திறமையை வெளிப்படுத்திய இவர், பெரிய திரை உலகில் காலடி எடுத்து வைத்துள்ளதால், தான் அறிமுகம் ஆகியுள்ள இந்தப் படத்தைப் பெரிதும் நம்பியிருக்கிறார். ‘பாரதி’ படத்தின் மூலம் பாரதியாகவே மக்கள் மனதில் அழுத்தமாக இடம் பிடித்த சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பிலும் ‘அகோரி ‘என்கிற படம் உருவாகியிருக்கிறது.இவர்களைப் போலவே தங்களது நடிப்பின் மூலம் முந்தைய படங்களின் வழியாகச் சிறந்த நடிப்புக் கலைஞர்களாகத் தடம் பதித்த குணச்சித்திர நடிகர்கள் பலரும் நடித்துள்ளனர். மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனன் தயாரித்திருக்கிறார். படத்தை இயக்கியிருப்பவர் அறிமுக இயக்குநர்…

Read More

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர் திரு.சிவசக்தி பாண்டியன் அவர்களுக்கு இயக்குநர் அமீரின் மடல்

வணக்கம். நான் இயக்குனர் அமீர்.. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர், தயாரிப்பாளர் திரு.சிவசக்தி பாண்டியன் அவர்களுக்கு, ஓர் மனம் திறந்த மடல்.. சென்னையைச் சூழ்ந்துள்ள மழை வெள்ளத்தால் பொதுமக்கள் சொல்லொணா துயரத்துக்கு ஆளாகி, முடங்கிப்போயுள்ள இந்த நேரத்தில், அதனுடைய தாக்கத்தில் இருந்து மீளமுடியாமலும், அந்த இழப்புகளுக்கு ஈடு செய்ய முடியாமலும், மீண்டும் தங்களது வாழ்க்கையச் சரி செய்யப் போராடிக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில்.. எனது “பருத்திவீரன்” தொடர்பான இதுபோன்ற ஒரு கடிதத்தை வெளியிடுவதில் நான் மிகவும் மனம் வருந்துகிறேன். ஆனால், 17 ஆண்டுகளுக்குப் பிறகு “பருத்திவீரன்” திரைப்பட வெளியீட்டில் நடந்த உண்மைகளைச் சொல்ல தேவை ஏற்பட்டிருக்கிற இன்றைய சூழலில், திரு.சிவசக்தி பாண்டியன் அவர்களுடைய நேர்காணலுக்குப் பதில் சொல்லாமல் நான் கடந்து விட்டால், நானே உண்மைகளை மறைப்பதாக ஆகிவிடும். எனவே, திரு.சிவசக்தி பாண்டியனாகிய உங்களுக்கும், “பருத்திவீரன்”…

Read More