ரத்னம் விமர்சனம்

கில்லி, பையா, என பல படங்களில் பார்த்த அதே கதை தான். நாயகியை துரத்தும் ஒரு கும்பல். நாயகியை காப்பாற்றப் போராடும் நாயகன், இந்த இரண்டு செயல்களுக்கும் பின்னால் காரணங்கள் அடங்கிய சில பின்கதைகள். இது தவிர்த்து நாயகன் விஷாலுக்கும் வில்லன் கூட்டத்திற்குமான மற்றொரு பின்கதை அடங்கியது தான் இந்த “ரத்னம்” திரைப்படத்தின் கதை. இக்கதையில் இறுதியில் நாயகன் நாயகியை காப்பாற்றினானா…? என்று கேட்கவும் வேண்டுமா என்ன…? ஆந்திரா, தமிழ்நாடு எல்லை பிரிக்கப்பட்ட பொழுது சில தமிழர்கள் மற்றும் தெலுங்கர்களின் நிலம் அண்டை மாநிலங்களில் மாட்டிக் கொண்டதால் ஏற்படும் பிரச்சனைகளில் துவங்கும் கதை, திருப்பதி மலை மேல் செல்லும் பேருந்தை கவிழ்த்து கொள்ளை கொலை சம்பவங்கள் நிகழ்த்தும் கயவர்களைக் காட்டி, அப்படியே தமிழ்நாட்டிற்கு பயணித்து, அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் சமுத்திரக்கனியை சிறு வயது விஷால் காப்பாற்றி…

Read More

நடிகர் விஷால் புகாருக்கு ஆர்.பி.சௌத்ரி நீண்ட விளக்கம்

நடிகர் விஷால் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி இருவருக்கும் இடையில் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான பஞ்சாயத்து செய்திகள் தமிழ் ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்று வந்தது இந்த நிலையில் உண்மையில் நடந்தது என்ன? என்பது குறித்து ஆர்.பி.சௌத்ரி நீண்ட விளக்கம் ஒன்றை அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில்…. மூன்று வருடங்களுக்கு முன்பு நடிகர் விஷால் இரும்புத்திரைபடம் தயாரிக்க என்னிடம் பைனான்ஸ் வாங்கியிருந்தார் அந்த படத்திற்கு நானும் விநியோகஸ் திருப்பூர் சுப்பிரமணியும் சேர்ந்து பணம் கொடுத்தோம் இரும்புத்திரைபடம் வெளியீட்டில் விஷால் எனக்கு கொடுக்க வேண்டிய பணத்தில் பாதி தொகையை சில தவணைகளில் கொடுப்பதாக கூறினார் நானும்‌ ஒரு தயாரிப்பாளர்‌ என்ற முறையில்‌ படம்‌ வெளியாக வேண்டுமென்று ஒப்புக்கொண்டு கிளியரன்ஸ் கொடுத்தேன்‌. இறுதியாக இருந்த பாக்கி தொகையை அவர்‌ தயாரித்து நடிக்கும்‌ ‘சக்ரா திரைப்படத்தின்‌ வெளியீட்டில்‌ தருவதாக கூறியிருந்தார்‌. சக்ரா படத்தின்‌ வெளியீட்டின்‌…

Read More