ரத்னம் விமர்சனம்

கில்லி, பையா, என பல படங்களில் பார்த்த அதே கதை தான். நாயகியை துரத்தும் ஒரு கும்பல். நாயகியை காப்பாற்றப் போராடும் நாயகன், இந்த இரண்டு செயல்களுக்கும் பின்னால் காரணங்கள் அடங்கிய சில பின்கதைகள். இது தவிர்த்து நாயகன் விஷாலுக்கும் வில்லன் கூட்டத்திற்குமான மற்றொரு பின்கதை அடங்கியது தான் இந்த “ரத்னம்” திரைப்படத்தின் கதை. இக்கதையில் இறுதியில் நாயகன் நாயகியை காப்பாற்றினானா…? என்று கேட்கவும் வேண்டுமா என்ன…? ஆந்திரா, தமிழ்நாடு எல்லை பிரிக்கப்பட்ட பொழுது சில தமிழர்கள் மற்றும் தெலுங்கர்களின் நிலம் அண்டை மாநிலங்களில் மாட்டிக் கொண்டதால் ஏற்படும் பிரச்சனைகளில் துவங்கும் கதை, திருப்பதி மலை மேல் செல்லும் பேருந்தை கவிழ்த்து கொள்ளை கொலை சம்பவங்கள் நிகழ்த்தும் கயவர்களைக் காட்டி, அப்படியே தமிழ்நாட்டிற்கு பயணித்து, அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் சமுத்திரக்கனியை சிறு வயது விஷால் காப்பாற்றி…

Read More

இயக்குநர் அமீர் குறித்தப் பேச்சுக்கு கரு.பழனியப்பனின் எதிர்வினை

ஊடகத்துறையினருக்கு வணக்கம். பருத்திவீரன் படம் பற்றியும் அமீர் பற்றியும் திரு ஞானவேல் பேசிய பிறகு அந்தப் படம் தொடர்புடைய சசிகுமார் தயாரிப்பாளர் கணேஷ்ரகு சமுத்திரக்கனி பொன்வண்ணன் சுதா கொங்குரா என ஒவ்வொருவராக அமீர் பக்கம் வந்து நிற்கிறார்கள்.. சில நாட்களில் மற்றவர்களும் அமீர் பக்கம் நிற்பார்கள்… நிற்க. இந்த அறிக்கை பருத்தி வீரன் படம் பற்றி அல்ல. ஞானவேலின் பொய்க் குற்றச்சாட்டு பற்றி.! பொன்வண்ணன் மொழியில் சொல்வதானால் ஞானவேலின் வக்கிரமான உடல் மொழி பற்றி.! எகத்தாளமாய் எப்படி ஒருவரால் இத்தனை பொய் சொல்ல முடிகிறது? அமீரை திருடன் என்றும் பொய் கணக்கு எழுதுபவர் என்றும் சொல்லுகிறாரே, நான் சொல்லுகிறேன் . ஆறு ஆண்டு காலம் தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத்தின் செயலாளராகவும், தென்னிந்திய திரைப்பட சம்மேளனத்தின் தலைவராகவும், தயாரிப்பாளர் தொழிலாளர் இடையே சுமூகம் ஏற்பட உருவாக்கப்பட்ட ஊதியக்குழுவின்…

Read More