ரத்னம் விமர்சனம்

கில்லி, பையா, என பல படங்களில் பார்த்த அதே கதை தான். நாயகியை துரத்தும் ஒரு கும்பல். நாயகியை காப்பாற்றப் போராடும் நாயகன், இந்த இரண்டு செயல்களுக்கும் பின்னால் காரணங்கள் அடங்கிய சில பின்கதைகள். இது தவிர்த்து நாயகன் விஷாலுக்கும் வில்லன் கூட்டத்திற்குமான மற்றொரு பின்கதை அடங்கியது தான் இந்த “ரத்னம்” திரைப்படத்தின் கதை. இக்கதையில் இறுதியில் நாயகன் நாயகியை காப்பாற்றினானா…? என்று கேட்கவும் வேண்டுமா என்ன…? ஆந்திரா, தமிழ்நாடு எல்லை பிரிக்கப்பட்ட பொழுது சில தமிழர்கள் மற்றும் தெலுங்கர்களின் நிலம் அண்டை மாநிலங்களில் மாட்டிக் கொண்டதால் ஏற்படும் பிரச்சனைகளில் துவங்கும் கதை, திருப்பதி மலை மேல் செல்லும் பேருந்தை கவிழ்த்து கொள்ளை கொலை சம்பவங்கள் நிகழ்த்தும் கயவர்களைக் காட்டி, அப்படியே தமிழ்நாட்டிற்கு பயணித்து, அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் சமுத்திரக்கனியை சிறு வயது விஷால் காப்பாற்றி…

Read More

தென்னிந்திய திரைப்படம், டி.வி. மற்றும் டிஜிட்டல் தயாரிப்பு நிர்வாகிகள் சங்கம். 50வது ஆண்டு பொன்விழா |

  தென்னிந்திய திரைப்படம் , டி.வி. மற்றும் டிஜிட்டல் தயாரிப்பு நிர்வாகிகள் சங்கத்தின் 50வது ஆண்டு பொன்விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடை பெற்றது. விழாவினை குஷ்பு சுந்தர் மற்றும் தேவயாணி இருவரும் குத்து விளக்கேற்றி துவக்கிவைத்தனர். விழாவில் ராமதுரை, ஜே.துரை, தேனப்பன், எம். கபார், நாச்சியப்பன், உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுக்கு நினைவுக்கேடயங்கள் வழங்கப்பட்டது. சங்கத்தை பற்றிய 50 வருட நிகழ்வுகள் ஆவணப்படமாக காட்டப்பட்டது. முல்லை – கோதண்டம் இருவரின் ஓரங்க நாடகம் மூலம் தயாரிப்பு நிர்வாகிகள் பற்றிய வேலை விவரங்கள் நகைச்சுவையாக நடித்துகாட்டப்பட்டது. 50 வருட பொன்விழா நினைவை குறிக்கும் புத்தகத்தை எஸ்.ஆர்.எம். யுனிவர்சிட்டி வேந்தர் பாரிவேந்தர் வெளியிட, , வேல்ஸ் யுனிவர்சிட்டி வேந்தர் ஐசரி கணேஷ் பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் என். இராமசாமி, துணைத்தலைவர்…

Read More