விஜயகாந்த் தலைமையில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்!

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டமானது சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாகவும் தேமுதிக கட்சியின் வளர்ச்சி பணிகள் தொடர்பாகவும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர்கள் சதீஸ் மற்றும் பார்த்தசாரதி ஆகிய முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தேமுதிக-வின் கட்சி அலுவலகம் கோயம்பேட்டில் உள்ளது. அந்த தலைமை அலுவலகத்தில் தான் கூட்டமானது நடைபெற்றது.

இதில் தேமுதிக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் 67 பேரும் பங்கேற்றனர். தொடர்ந்து தேமுதிக- வின் கட்சி வளர்ச்சி பணிகளை அனைத்து மாவட்டங்களிலும் விரிவாக முன்னெடுப்பது தொடர்பாகவும், அடுத்து வரக்கூடிய உள்ளாட்சி தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்பது குறித்து மாவட்ட செயலாளர்களிடம் கருத்துக்களை கேட்க இந்த கூட்டமானது நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் என்பது விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து கட்சிகளும் அதற்கான முன்பணிகளை முன்னெடுக்க துவங்கி விட்டார்கள். அதனை போலவே தேமுதிகவும் இந்த பணிகளை முன்னெடுத்துள்ளனர். இந்தக் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழகத்தில் சேதமடைந்துள்ள சாலைகள், தெருக்களை உடனே சீரமைக்க நிதி ஒடுக்க வேண்டும் என அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக வுக்கு ஒதுக்கப்படும் இடங்களில் வெற்றி பெறுவதற்கு கட்சி தொண்டர்கள் பணியாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க தமிழக அரசு சிறப்பு முகாம்களை நடத்திட வேண்டும், ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவும் தேமுதிக வலியுறுத்தியுள்ளது.

Related posts

Leave a Comment