‘கர்ணன்’ சினிமா விமர்சனம்

மேல் சாதிக்காரர்களிடம் சிக்கிச் சின்னாபின்னமாகும் கீழ் சாதி மக்களைப் பற்றி நிறைய படங்கள் வந்தாயிற்று. கலைப்புலி தாணுவின் மிக பிரமாண்டமான தயாரிப்பில், மண்வாசனையுடன் புதிதாய் இன்னொன்று… பொடியன்குளம் என்ற அந்த கிராமத்தின் வழியாக பேருந்து போக்குவரத்து இருக்கிறது. ஆனால், அந்த கிராமத்தினர் தாழ்ந்த சாதிக்காரர்கள் என்பதால், அந்த கிராமத்தில் பேருந்து நின்று பயணிகளை ஏற்றிச் செல்வதில்லை. அதனால் அந்த கிராமத்துப் மக்கள் மற்ற ஊர்களுக்குப் போய் வருவதில் ஏகப்பட்ட சிரமங்களை அனுபவிப்பதோடு, பிள்ளைகளும் மற்ற ஊர்களுக்குப் போய் படிக்க முடியாத சூழ்நிலை. அத்தனைக்கும் காரணம் அடுத்த ஊர் உயர் சாதிக்காரர்களின் செல்வாக்கு. அந்த செல்வாக்கால் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வலிகளைச் சுமந்த குடும்பத்திலிருந்து கர்ணன் என்ற பெயர் சுமந்த இளைஞன் கொந்தளித்து எழுகிறான். அவனது கோபத்திலும் கொந்தளிப்பிலும் நியாயம் இருப்பதால் ஊர் மக்கள் அவனுடன் கை கோர்க்கிறார்கள். உயர்…

Read More