பட்டாஸ் படம் அனைத்துத் தரப்பினரும் பார்க்கத் தகுந்தது! – சத்யஜோதி தியாகராஜன் உறுதி!

“’பட்டாஸ்’ படத்தில் கதையின் நாயகன் தனுஷ், அடி முறை கலைகளில் தேர்ந்தவராக இருக்கிறார். இதற்காக தனுஷ் 6 மாதங்கள் பயிற்சி பெற்றார். படத்தில் அவருக்கு மனைவியாக வரும் சினேகா வும் இந்த கலையை கற்றுக் கொண்டார். தனுஷ் அப்பாவாகவும், மகனாகவும் 2 வேடங்களில் நடித்து இருக்கிறார். படம், பொங்கல் விருந்தாக 1,500 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. எங்கள் பட நிறுவனம் எப்போதுமே குடும்பப்பாங்கான படங்களையே தயாரித்து வருகிறது. ஆபாச காட்சிகளோ, இரட்டை அர்த்த வசனமோ இருக்காது. ‘பட்டாஸ்’ படமும் அப்படியே அமைந்து இருக்கிறது. அனைத்து தரப்பினரும் பார்க்கும் வகையில், தணிக்கை குழுவினர், ‘யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்”என்று சத்யஜோதி தியாகராஜன் தெரிவித்தார்

கடந்த அக்டோபர் மாதம் தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ திரைப்படம் விமர்சன ரீதியாகப் பாராட்டுகளைப் பெற்றதோடு வசூலிலும் அசுர சாதனை புரிந்தது. அந்தப்படத்தில் தனுஷின் முதிர்ச்சியான நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. ஆனால் அதனைத் தொடர்ந்து வெளியான ‘எனை நோக்கிப்பாயும் தோட்டா’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில் அதனைத் தொடர்ந்து ‘பட்டாஸ்’ திரைப்படத்தில் தனுஷ் நடித்துவந்தார்.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ள பட்டாஸ் திரைப்படத்தின் ட்ரெயிலர் கடந்த வாரம் (ஜனவரி 7) வெளியானது. கொடி திரைப்படத்தில் அண்ணன்-தம்பியாக இரட்டை வேடங்களில் நடித்த தனுஷ் இந்தப்படத்தில் அப்பா-மகனாக நடித்துள்ளார். அப்பா கதாபாத்திரத்துக்கு ஜோடியாக ஸ்னேகாவும், மகன் கதாபாத்திரத்தின் ஜோடியாக மெஹ்ரீன் பிர்சடாவும் நடித்துள்ளனர்.

டிரெய்லரில் தனுஷின் மனைவியாக வீரம் மிக்க பெண்ணாக நடித்துள்ள ஸ்னேகா ஒரு காட்சியில் கையில் துப்பாக்கியால் சுடுவதைப் போன்றும் மற்றொரு இடத்தில் ஜெயிலில் இருப்பது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. கைதி உடை அணிந்திருக்கும் ஸ்னேகா, ‘கிக் பாக்சிங்கில் தொடர் வெற்றி’ என்று வில்லனின் புகைப்படம் உள்ள பத்திரிகை செய்தியை எடுத்து சுவரில் ஒட்டுவதாகவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

பட்டாஸ் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 16-ஆம் தேதி வெளியாக வுள்ளது. விவேக்-மெர்வின் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் நவீன் சந்திரா, நாசர், முனீஸ் காந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  இந்நிலையில்தான் பட்டாஸ் தயாரிப்பாளர் தியாகராஜன், “பட்டாஸ் படம், பொங்கல் விருந்தாக 1,500 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. எங்கள் பட நிறுவனம் எப்போதுமே குடும்பப்பாங்கான படங்களையே தயாரித்து வருகிறது. ஆபாச காட்சிகளோ, இரட்டை அர்த்த வசனமோ இருக்காது. ‘பட்டாஸ்’ படமும் அப்படியே அமைந்து இருக்கிறது. அனைத்து தரப்பினரும் பார்க்கும் வகையில், தணிக்கை குழுவினர், ‘யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்: என்றார்

Related posts

Leave a Comment