ஒரு நொடி விமர்சனம்

நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் பல்லாயிரம் நொடிகளால் ஆனது. அதில் ஒரு நொடி நம் வாழ்க்கையை ஒரேயடியாக மாற்றிப் போடும் ஆற்றல்மிக்கதாக இருக்கிறது என்கின்ற கருத்தை வலியுறுத்தும் திரைப்படமே இந்த “ஒரு நொடி” திரைப்படம். தன் கணவர் சேகரனை (எம்.எஸ்.பாஸ்கர்) காணவில்லை என்று ஒரு இரவு நேரத்தில் வந்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார் சகுந்தலா (ஸ்ரீரஞ்சனி). அதுமட்டுமின்றி தன் கணவருக்கும் கரிமேடு தியாகு (வேல ராமமூர்த்தி) –வுக்கும் இடையில் நிலப்பத்திரம் தொடர்பான பிரச்சனை இருப்பதையும் கூறி தனக்கு அவர் மீது சந்தேகம் இருக்கிறது என்று கூறுகிறார். இளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரிதி இளமாறன் (தமன்குமார்) சேகரன் காணாமல் போன வழக்கின், முதல் சந்தேகப் பார்வையை கரிமேடு தியாகுவின் மீது வைத்து அந்த வழக்கை விசாரிக்கத் துவங்குகிறார். அந்த விசாரணையின் போதே மற்றொரு இளம்பெண் ஒருவரும் மர்மமான முறையில்…

Read More