அதிமுகவில் இருந்துயார் சென்றாலும் கட்சிக்கு பாதிப்பு இல்லை-ஒபிஎஸ்

அதிமுக என்பது ஒரு ஆலமரம். இதிலிருந்து யார் சென்றாலும் பாதிப்பு இல்லை என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தம் நடத்திய போது அவருக்கு உறுதுணையாக ஆதரவாக நின்றவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கம். தற்போது அவர் திமுகவில் இணைந்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அக்கட்சியில் இணைந்து கொண்டார். இது ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்துக்காகச் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம்  (மார்ச் 21) மதுரை வந்தார் ஓ.பன்னீர்செல்வம். அவரிடம், தர்ம யுத்தத்தின் போது உங்களுக்கு உறுதுணையாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ.முத்துராமலிங்கம் அதிமுகவிலிருந்து விலகியதற்குக் காரணம் என்ன? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த ஓபிஎஸ், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது மிகப்பெரிய…

Read More

அதானி துறைமுகத்திட்டத்தை அதிமுக ஆதாரிக்காது – பன்னீர்செல்வம்

காட்டுப்பள்ளி அதானி துறைமுகத் திட்டத்தை அதிமுக ஆதரிக்காது என்று துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மக்களுக்கு உறுதி அளித்துள்ளார். சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திருவொற்றியூர் தேரடி பகுதி, பொன்னேரி, அம்பத்தூர் பேருந்து நிலையம், போரூர் சந்திப்பு உள்ளிட்ட பகுதியில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய துணை முதல்வர், “தாலிக்குத் தங்கம் 4 கிராமிலிருந்து 8 கிராமாக உயர்த்தப்பட்டுள்ளது. பேறு கால நிதியுதவியும் உயர்த்தப்பட்டுள்ளது, இலவச மிக்ஸி, கிரைண்டர் வழங்கப்பட்டுள்ளது” என அதிமுகவின் திட்டங்கள் குறித்துப் பேசினார். “திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, நில அபகரிப்பு போன்ற பிரச்சினைகள் இருந்தன. ஆனால் தற்போது தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கிறது. இதை மக்கள் எண்ணி பார்க்க…

Read More