அரசாங்கத்தின் கொடூர முகத்தினை தோலுரிக்கும் தேன் – சிறப்பு பார்வை

பசுமை, பசுமை, பசுமை… திரும்பிய பக்கமெல்லாம் பசுமை படர்ந்த தேனி மாவட்டத்தின் மலைக் கிராமம். காதலறும்பிய இளவட்டங்கள் வேலுவும் பூங்கொடியும் கணவன் – மனைவியாக உற்றார் உறவினர் சம்மதித்தாலும் கடவுளின் உத்தரவு கிடைக்காத நிலை. கடவுளின் முடிவை மீறினால் தம்பதிகளில் ஒருவருக்கு மரணம் நிச்சயம்’ என்கிறார்கள் ஊர்ப் பெரியவர்கள். காதலர்கள் மீறுகிறார்கள். குறிப்பிட்ட குறைபாட்டோடு குழந்தை பிறக்க, அடுத்தடுத்தும் வளைத்துக் கட்டி வெளுத்து வாங்குகிறது சோதனைகள். அத்தனைக்கும் காரணம் மக்கள் விரோத அரசின், மனிதம் தொலைத்த அரசு ஊழியர்களின் அராஜகம். அந்த அராஜகங்களின்  தொகுப்பு அழ வைக்கும் காட்சிகளாய் விரிகிறது. ஆதார் கார்டு, காப்பீடு அட்டை போன்றவைகளால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை விளக்கியிருப்பதெல்லாம் இயக்குநர் கணேஷ் விநாயக்கின் துணிச்சல்! ஓங்கி உயர்ந்த மலையில் அதைவிட ஓங்கி உயர்ந்த மரங்களில் தாவி தேனெடுத்து பிழைப்பு நடத்தும் அப்பாவி இளைஞனாய்…

Read More