தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தனது மகள் ஆத்னா பெயரில் தொடங்கியுள்ள உலகத் தரம் வாய்ந்த போஸ்ட் புரொடக்ஷன் ஸ்டுடியோவான ஆத்னா ஆர்ட்ஸ் ஸ்டுடியோ, 2024 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான ‘கங்குவா’ படத்திற்கு நடிகர் சூர்யா இந்த ஸ்டுடியோவில் டப்பிங் பேசியுள்ளதன் மூலம் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது! நடிகர் சூர்யா வரவிருக்கும் தனது ‘கங்குவா’ படத்துக்கான டப்பிங்கை பிரபல தயாரிப்பாளரான கே.ஈ ஞானவேல்ராஜா அமைத்த உலகத் தரம் வாய்ந்த போஸ்ட் புரொடக்ஷன் ஸ்டுடியோவான ஆத்னா ஆர்ட்ஸ் ஸ்டுடியோவில் தொடங்கினார். இந்த ஸ்டுடியோவை ஞானவேல்ராஜா தனது மகளின் பெயரில் தொடங்கியுள்ளார். திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக ‘கங்குவா’ உள்ளது. இணையற்ற தயாரிப்பு மதிப்பு, திறமையான நடிகர்கள் என படத்தில் ஒவ்வொரு விஷயம் கவனமாகவும் கச்சிதமாகவும் செதுக்கப்பட்டுள்ளது. நிச்சயம் நடிகர் சூர்யாவின் சினிமா பயணத்தில்…
Read MoreDay: February 21, 2024
ரணம் படத்தில் பெண் கதாபாத்திரங்கள் வலிமையோடு படைக்கப்பட்டு இருக்கிறது – நடிகர் வைபவ்
அறிமுக இயக்குநர் ஷெரீஃப் இயக்கத்தில் வைபவ், தான்யா ஹோப், நந்திதா ஸ்வேதா, சரஸ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் “ரணம் அறம் தவறேல்”. அரோல் கரோலி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பாலாஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மது நாகராஜ் தயாரித்திருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பேசும் போது, வெளிநாட்டில் வேலை செய்து செட்டிலாகிவிட்டு, தன் கனவை துரத்தி, தன் ஆசையை நோக்கி வந்து தமிழ்நாட்டில் “ரணம்” அறம் தவறேல் படம் எடுத்திருக்கிறார்கள். அதையும் மூன்று நான்கு வேலைகளில் ஒன்றாகக் கருதாமல், அதற்கென்று பிரத்யேகமான கவனம் கொடுத்து அர்ப்பணிப்புடன் அதை உருவாக்கி இருக்கிறார் மது நாகராஜன். இது சாதாரண விசயம் இல்லை. சமீபத்தில்…
Read More