இசைஞானி இளையராஜா இசையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச்செயலாளர் தோழர் இரா.முத்தரசன் , நடிகர் சமுத்திரக்கனி இணைந்து நடிக்கும் “அரிசி” திரைப்பட படப்பிடிப்பு நிறைவடைந்தது!! மோனிகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் S. A.விஜயகுமார் இயக்கத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் இரா முத்தரசன், நடிகர் சமுத்திரக்கனி இணைந்து நடிக்க, இன்றைய சமூகத்தில் உணவின் பின்னாலான அரசியலை, அழுத்தமாக பேசும் படைப்பாக உருவாகி வரும் திரைப்படம் “அரிசி”. இப்படத்தின் முழுப் படப்பிடிப்பையும் முடித்த படக்குழு, தற்போது இறுதிக்கட்ட பணிகளைத் துவக்கியுள்ளது. நம் உணவான அரிசியின் பின்னால் இருக்கும் அரசியலை, விவாசாயத்தின் உண்மைகளை பேசும் அழுத்தமான படைப்பாக இப்படம் உருவாகிறது. மேற்கத்திய உணவை முன்மொழியும் கார்பரேட், நம் பாரம்பரியத்தை, நாம் அறியாமலே அழித்து வருகிறது. நம் சமூகத்தின் மிக முக்கியமான இந்த பிரச்சனையை ஒரு அழுத்தமான திரைக்கதையுடன், ஆழமான…
Read MoreDay: March 13, 2024
உழைக்கும் பெண்களை தங்க நாணயத்தால் உற்சாகப்படுத்திய நடிகர் ஆரி அர்ஜுனன்!!
தமிழின் முன்னணி இளம் நடிகர் ஆரி அர்ஜுனன், பெண்கள் ஒவ்வொரு வருமே கொண்டாடப் படவேண்டியவர்கள் தான் என்பதை வழியுறுத்தி தனது அம்மாவின் நினைவை போற்றும் வகையில் மறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை மூலமாக , எளிய வர்க்கத்தின் பின்னணியிலிருந்து பணியாற்றும் பெண்கள் 10 பேரை சந்தித்து வாழ்த்துக்கூறியதுடன், அவர்களுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்டாக தங்க நாணயம் பரிசளித்தார். இயற்கை சார்ந்த விவசாயம், இயற்கை உணவுகள், சமூகத்திற்கான உதவிகள் என தொடர்ந்து, சமூக அக்கறையுடன் பணியாற்றி வரும் நடிகர் ஆரி அர்ஜுனன், தன் அன்னையின் நினைவாக மகளிரை கொண்டாடும் வகையில் அவர்களுக்கு பரிசளித்திருப்பதை, மக்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். இது குறித்து ஆரி அர்ஜுனன் கூறுகையில்.. ஒவ்வொரு மகளிரும் ஒவ்வொரு நாளுமே கொண்டாடப்படவேண்டியவர்கள். குறிப்பாக நம் இரத்த உறவுகளான அம்மா, மனைவி, அக்கா, தங்கை, குழந்தை, என அனைவரையும் தாண்டி, நமக்காகவும்…
Read More