நடிகர் விவேக்கின் 3ம் ஆண்டு நினைவுதினத்தை மரக்கன்றுகளுடன் நினைவு கூர்ந்த நடிகர்கள்

மறைந்த நடிகர் விவேக்கின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக படப்பிடிப்பு தளத்தில் மரக்கன்றுகளை நட்டார் நடிகர் வைபவ்! நடிகர் வைபவ்வின் பெயரிடப்படாத 27 வது திரைப்படம் சென்னை தரமணியில் உள்ள எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. நடிகர் வைபவுடன் செல்முருகனும் இணைந்து நடித்து வருகிறார் இந்நிலையில் இன்று மறைந்த நடிகர் விவேக்கின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி விவேக்கிற்கு மரியாதை செலுத்தும் விதமாக, வைபவ்வின் 27 வது திரைப்பட படப்பிடிப்பு தளத்தில் மரக்கன்றுகளை படக்குழு நட்டுள்ளனர். மேலும் அங்கு பணியாற்றும் படக்குழுவினர் மற்றும் திரைப்படக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு என மொத்தம் 100 மரக்கன்றுகளை படக்குழு வழங்கியுள்ளது.

Read More

ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரரை பயிற்சியாளராக நியமித்துள்ளது வேல்ஸ் ஃபுட்பால் கிளப்!

வேல்ஸ் குழுமங்களில் நிறுவனத்தலைவர் டாக்டர். ஐசரி கே. கணேஷ் பன்முகம் திறமை கொண்டவர். கல்வி, திரைத்துறை, விளையாட்டு, சமூக சேவை எனப்பல தளங்களில் முன்னேற்றத்தை கொண்டு வர உழைத்து வருபவர். தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் மற்றும் இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு ஆகியவற்றின் தலைவராக உள்ள டாக்டர் ஐசரி.கே.கணேஷ், விளையாட்டு வீரர்களை கண்டறிந்து அவர்களின் திறமைகளை வளர்ப்பதற்காக தொடர்ந்து பயணித்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக டாக்டர் ஐசரி கே கணேஷின் சிந்தனையில் உருவானது தான் வேல்ஸ் கால்பந்து கிளப். இந்த கிளப் தமிழ்நாட்டில் கால்பந்து விளையாட்டை வளர்ப்பதற்காக தொடங்கப்பட்டது. தற்போது இந்த கிளப் கால்பந்து விளையாட்டு மீது ஆர்வம் கொண்டுள்ள பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக ஒரு முன்னோடி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வேல்ஸ் குழுமங்களின் நிறுவனத்தலைவர் டாக்டர். ஐசரி.கே…

Read More