ஃபைட் க்ளப் விமர்சனம்

  வடசென்னை களம், கஞ்சா போதைப் பொருள் கடத்தல், வளர்ச்சிக்கு முயலும் இளைஞர், அவருக்கு உதவும் வடசென்னை முக்கியப் புள்ளி, துரோகம், பழிவாங்கல், கேங்க், கேங்க்வார் சண்டை இவைகளின் தொகுப்பே ஃபைட் க்ளப். வட சென்னைக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அங்க அடையாளத்தில் இருந்து சற்றும் பிரளாத மற்றுமொரு தமிழ் சினிமா. வடசென்னை என்றாலே போதை கலாச்சாரம், கேங்க் வார், சண்டை, அடிதடி வம்புக்கு பயப்படாத இளைஞர்கள், கால் பந்தாட்டம், கேரம், மேற்கத்திய நடனம், நட்பு, துரோகம், பழி வாங்கல் என்று ஏற்கனவே போட்டு வைக்கப்பட்டிருக்கும் கெட்டியான எந்த மழைக்கும் எந்த நூற்றாண்டுக்கும் பெயர்ந்தே போகாத தார் சாலையில்  ஓடவிடப்பட்டிருக்கும் புதிய பேருந்து தான் “ஃபைட் க்ளப்”. எங்களை குற்றவாளிகளாகவே சித்தரிக்காதீர்கள்; பிற பகுதி மக்கள் எங்களை பார்த்தாலே பழகத் தயங்குகிறார்கள்; ஒதுங்கிப் போகிறார்கள், எங்களிடமும் வாழ்க்கை இருக்கிறது, எந்த…

Read More

சைக்கலாஜிக்கல் ஆக்‌ஷன் த்ரில்லர் “ஸ்பார்க் L.I.F.E” அமேசானில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது

‘இளம் நாயகன்’ விக்ராந்த், நடிகைகள் மெஹரின் பிர்சாதா மற்றும் ருக்ஷா தில்லான் நடிப்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் ‘ஸ்பார்க் L.I.F.E’. இந்தத் திரைப்படம் நவம்பர் 17ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இளம் நாயகன் விக்ராந்த் கதையின் நாயகனாக அறிமுகமானதுடன், இப்படத்திற்கு கதை, திரைக்கதையும் அவரே எழுதி இருக்கிறார். இப்படத்தை டெஃப் ஃப்ராக் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு ‘ஹிருதயம்’ மற்றும் ‘குஷி’ புகழ் ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். மலையாள நடிகர் குரு சோமசுந்தரம் வில்லனாக நடித்துள்ளார். திரில்லர் ஜானரிலான படைப்புகளை விரும்பி ரசிக்கும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இந்தத் திரைப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்றது. எதிர்பாராத திருப்பங்களையும் சுவாராசியமான முடிச்சுகளையும் கொண்ட இந்த சைக்காலஜிக்கல் ஆக்சன் திரில்லர் திரைப்படம்.. நல்ல சக்திக்கும் – தீய…

Read More

கோவை வெடிவிபத்தை பேசும் படமா இந்த பாய் – Sleeper Cell?

இயக்குநர் புவன் செல்வகுமார் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “பாய்” ஸ்லீப்பர் செல். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு நடந்தது. தற்போது பாய் ஸ்லீப்பர் செல் படத்தின் ட்ரைலர் பார்வையாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. மூன்று இடங்களில் bomb blast உறுதி என்ற வசனத்தைக்கொண்டு Church மற்றும் கோவில் visual – உடன் trailer ஆரம்பம் ஆகிறது. எங்க பாய் சொல்வார் மதம் ஒரு அரசியல் கருவி என்ற வசனம் (அப்பொழுது மூன்று மதங்களின் பெயர் paper – ல் எழுதியிருப்பது ) நான் மதம் மாறனுமா? இஸ்லாமிய பெண் தொழுகும்போது மூன்று பேர் வெடிகுண்டு தயாரித்துக்கொண்டு இருப்பது. பிடித்த பெண்ணை கல்யாணம் செய்ய மதம் மாற்றம் போன்ற வசனங்களைக் கொண்டு விறுவிறுப்பான காட்சிகளுடன் Trailer சுவாரஸ்யமாக இருக்க இறுதியில்…

Read More

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டுக்களைக் குவித்த “உடன்பால்” திரைப்படம் !!

  டி கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே. வி. துரை தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கார்த்திக் சீனிவாசன் இயக்கத்தில், நடிகர் சார்லி நடிப்பில் வெளியான “உடன்பால்” திரைப்படம், 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுக்களைக் குவித்துள்ளது. பார்வையாளர்கள் பெரும் கரகோஷம் எழுப்பிப் படக்குழுவினரை வாழ்த்தினர். சென்னை சர்வதேச திரைப்பட விழா 20 ஆண்டுகளைக் கடந்து, 21 வது ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. உலகம் முழுவதுமிலிருந்து தரமான பல திரைப்படங்கள் இவ்விழாவில் திரையிடப்பட்டு வருகின்றன. 1000க்கும் மேற்பட்ட திரைப்பட ஆர்வலர்கள் இவ்விழாவைப் பார்வையிட்டு வருகின்றனர். இவ்விழாவில் தமிழிலிருந்து சிறந்த படப்போட்டித் தேர்வில் 12 அற்புதமான படைப்புகள் திரையிடப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் நேற்று “உடன்பால்” படம் நேற்று திரையிடப்பட்டது. இந்த திரையிடலில் இயக்குநர் கார்த்திக் சீனிவாசன், நடிகர் சார்லி, நடிகர் லிங்கா, நடிகை காயத்ரி,…

Read More

சமுத்திரக்கனி, யோகி பாபு நடிப்பில் ’யாவரும் வல்லவரே’ படம் டிசம்பர் 29, 2023 அன்று வெளியாகிறது

11:11 புரொடக்‌ஷன் டாக்டர். பிரபு திலக் வழங்கும், தீ கமிட்டி பிக்சர் சார்பில் கி. ஆனந் ஜோசப் ராஜ் தயாரிப்பில், சமுத்திரகனி மற்றும் யோகி பாபு இணைந்து நடித்திருக்கும் ‘யாவரும் வல்லவரே’ திரைப்படம் டிசம்பர் 29,2023 அன்று வெளியாகிறது! ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்ற ‘வால்டர்’, ’பாரிஸ் ஜெயராஜ்’ போன்ற வெற்றிப்படங்களை தந்தவர் 11:11 புரொடக்‌ஷன் டாக்டர். பிரபு திலக் அவர்கள். தற்போது N.A. ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கத்தில் ‘யாவரும் வல்லவரே’ எனும் புதிய படத்தை வழங்கவுள்ளார். இப்படத்தில் சமுத்திரகனி, யோகி பாபு இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்க, அவர்களுடன் தமிழின் பல முன்னனி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 11:11 புரொடக்‌ஷன் சார்பில் டாக்டர். பிரபு திலக் படம் குறித்து பகிர்ந்து கொண்டதாவது, “’வால்டர்’, ’பாரிஸ் ஜெயராஜ்’ படங்களின் பிரமாண்டமான வெற்றியை அடுத்து எங்களின் ’யாவரும் வல்லவரே’…

Read More

தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபுதேவா பட டைட்டில் “ஜாலியோ ஜிம்கானா”

தமிழ்சினிமா வரலாற்றில் முதன் முறையாக ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டைட்டில் கொண்ட ‘ஜாலியோ ஜிம்கானா’ படத்தினை டிரான்ஸ் இண்டியா மீடியா & எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் எம். ராஜேந்திர ராஜன் தயாரிக்கிறார். இயக்குநர் ஷக்தி சிதம்பரம்- நடிகர் பிரபுதேவா காம்போ இந்தப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளது! டிரான்ஸ் இண்டியா மீடியா & எண்டர்டெய்ன்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கதைகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களைத் தயாரித்து வருகிறது. இதற்கு முன்பு ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற தமிழ்ப் படத்தையும் மராத்தி படம் ஒன்றையும் தயாரித்துள்ளது. இப்போது முழுக்க முழுக்க ஃபேமிலி எண்டர்டெயின்மெண்ட் படமான ஜாலியோ ஜிம்கானா என்ற படத்தை சிறப்பாக தயாரித்து தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுத்துள்ளது. ‘சார்லி சாப்ளின்’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் ஷக்தி சிதம்பரம்- பிரபுதேவா காம்போ மீண்டும் இணைந்துள்ளது. இந்தப் படத்திற்கு ‘ஜாலியோ…

Read More

விஷ்ணு மஞ்சுவின் ‘கண்ணப்பா’வில் இணைந்த நடிகை ப்ரீத்தி முகுந்தன்!

  பிரபல பரதநாட்டியக் கலைஞர் ப்ரீத்தி முகுந்தன் விஷ்ணு மஞ்சுவின் ‘கண்ணப்பா’ வின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்! இந்திய சினிமாவில் தயாராகி வரும் எதிர்பார்ப்பு மிக்க விஷ்ணு மஞ்சுவின் ‘கண்ணப்பா’ திரைப்படம் மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. முதல் பார்வை மூலம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், தயாரிப்பாளர்கள் தற்போது திறமையான ப்ரீத்தி முகுந்தன் படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் தகவலை வெளியிட்டுள்ளனர். தனது சினிமா பயணத்தின் ஆரம்பத்திலேயே ‘கண்ணப்பா’ போன்ற இந்திய சினிமாவின் பிரமாண்டமான பயணத்தில், முன்னணி நட்சத்திரங்களுடன் ப்ரீத்தி இணைந்திருப்பது பலரை வியக்க வைத்துள்ளது. ’கண்ணப்பா’ திரைப்படத்தில் ப்ரீத்தி நடிக்கும் முக்கிய கதாபாத்திரத்திற்கான நடிகர்கள் தேர்வு செயல்முறை கடுமையானதாக இருந்தது. கதாபாத்திரத்திற்கு சரியான பொருத்தத்தைக் கண்டறிய பல தேர்வுகள் நடத்தப்பட்டன. ஒரு முழுமையான தேடலுக்குப் பிறகு, திரைப்படத் தயாரிப்பாளர்கள் ப்ரீத்தி முகுந்தனை தேர்வு…

Read More

’பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு தங்க வளையம் பரிசளித்த ஹரிஷ் கல்யாண்

  ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில் உருவாகியுள்ள ’பார்க்கிங்’ படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரித்துள்ளது. இதன் சக்சஸ் மீட் நடந்தது. நிகழ்வில் படத்தின் காஸ்ட்யூம் டிசைனர் ஷேர் அலி பேசியதாவது, “படத்தை மிகப்பெரிய வெற்றியாக்கிக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. இந்த வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் ராம்குமார், தயாரிப்பாளருக்கு நன்றி. ஒத்துழைப்புக் கொடுத்த படக்குழுவுக்கு நன்றி. உங்களால்தான் என்னால் நன்றாக பணி செய்ய முடிந்தது. ‘பார்க்கிங்’ போல எங்களது அடுத்தடுத்தப் படங்களையும் வெற்றி பெற வையுங்கள்”. நடிகர் சுரேஷ் பேசியிருப்பதாவது, “இந்தப் படத்தை வெற்றிப் பெற வைத்த உங்களுக்கு நன்றி. வாய்ப்புக் கொடுத்த இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி”. நடிகை பிரார்த்தனா, “இந்தப் படத்தை எல்லோருக்கும் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கு…

Read More

ஸ்ரீகாந்த் தேவா இசையில் இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின் வரிகளில் ‘தேனிசைத் தென்றல்’ தேவா பாடியுள்ள புதிய அசத்தல் ஆல்பம்

தனியிசை பாடல்கள் மூலமாகவும் தமிழ் திரைப்பட பாடல்கள் வாயிலாகவும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் மனங்களில் இடம் பிடித்துள்ள இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின் தனது அடுத்த ஆல்பத்திற்காக ‘தேனிசைத் தென்றல்’ தேவா மற்றும் ஸ்ரீகாந்த் தேவா உடன் இணைந்துள்ளார். லண்டனைச் சேர்ந்த தொழிலதிபரும் சமூக சேவகருமான DR. மாலாகுமார் தனது மாலாகுமார் படைப்பகத்தின் சார்பில் தயாரித்துள்ள இந்த பாடல் விரைவில் வெளியாக உள்ளது. சமீபத்தில் தேசிய விருது பெற்ற ஶ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இந்த உற்சாகமிக்க பாடலை அவரது தந்தையும் பிரபல இசையமைப்பாளருமான தேவா தனது காந்த குரலில், பிரத்யேக ஸ்டைலில் பாடியுள்ளார். விஜய் ஆண்டனி நடித்த’ நான்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தப்பெல்லாம் தப்பே இல்லை’ பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கவிஞர் பொத்துவில் அஸ்மின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’, அஜித் குமார்…

Read More

ஃபைட்டர் படத்தில் இருந்து வெளியாகியுள்ள அட்டகாசமான பாடல்!

  இந்த ஆண்டின் பார்ட்டி கீதம்: சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோஷன் ஃபைட்டரின் ‘ஷேர் குல் கயே’ மூலம் கொண்டாட்டங்களை புதிய உயரத்திற்கு கொண்டு செல்கிறார் இந்தியாவின் டான்ஸ் ஐகானான சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோஷனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புதிய பாடல் அவரது வரவிருக்கும் படமான ‘ஃபைட்டர்’ படத்தில் இருந்து தற்போது வெளியிடப்பட்டது. ‘ஷேர் குல் கயே’ (Sher Khul Gaye) என்ற இந்த பாடல் கேட்டவுடனேயே நம்மை ஆர்ப்பரிக்க செய்கிறது. இந்த பாடலுக்கு ஹிருத்திக் ரோஷனைத் தவிர வேறு யாரும் ஆட முடியாது என்று சொல்லும் அளவிற்கு சிறப்பாக நடனமாடி உள்ளார். மேலும் அவருக்கென்ற அடையாளமாக மாறும் கடினமாக டான்ஸ் மூவ்ஸ்களை எளிமையாக மாற்றுகிறார். அவரது ஈடு இணையற்ற நடனத் திறமைக்காகப் புகழ் பெற்ற ஹிருத்திக் ரோஷன், ‘ஷேர் குல் கயே’ பாடலின் மூலம் மீண்டும்…

Read More