நீலம் புரொடெக்ஷன்ஸ் சார்பாக இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் லெமன் லீப் கிரியேஷன்ஸ் சார்பாக ஆர்.கணேஷ் மூர்த்தி மற்றும் ஜி.சவுந்தர்யா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ப்ளூ ஸ்டார். அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், ப்ருத்வி, பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், லிசி ஆண்டனி, திவ்யா துரைசாமி, அருண் பாலாஜி மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் வைத்து நடைபெற்றது. படத்தில் நடித்த நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் பல முக்கிய சினிமா கலைஞர்கள், பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். படத்தின் நாயகியான கீர்த்திப் பாண்டியன் பேசும் போது, இப்படத்தின் பயணம் 2022ல் தொடங்கியது. அமர்ந்து பேசுவதற்குக் கூட இடம் கிடைக்காமல் நானும்…
Read MoreMonth: January 2024
”இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தும்” -சிக்லெட்ஸ் பட இயக்குநர்
‘திறந்திடு சீசே’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் எம். முத்து இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘சிக்லெட்ஸ்’. இதில் நடிகர்கள் சாத்விக் வர்மா, ஜாக் ராபின்சன், ரஹீம், நடிகைகள் நயன் கரிஷ்மா, அமிர்தா ஹல்தார், மஞ்சீரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைத்திருக்கிறார். ராஜு கலை இயக்க பணிகளை மேற்கொள்ள, விஜய் வேலுக்குட்டி படத் தொகுப்பை கவனித்திருக்கிறார். 2k கிட்ஸிற்கும் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் இடையேயான தலைமுறை இடைவெளியை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எஸ் எஸ் பி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் ஏ. சீனிவாசன் குரு தயாரித்திருக்கிறார். ஸ்வர்ணா ஸ்ரீ இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசராக பொறுப்பேற்றிருக்கிறார். இந்தத் திரைப்படம் எதிர்வரும் பிப்ரவரி இரண்டாம் தேதி அன்று தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில்…
Read Moreமெரி கிறிஸ்துமஸ் விமர்சனம்
கிறிஸ்துமஸ் தினத்தின் முன்னிரவு நேரத்தில் எதிர்பாராமல் சந்தித்துக் கொள்ளும் இரண்டு கதாபாத்திரங்கள் இடையே மெல்லிய புரிதல் ஏற்படுகிறது. அந்தப் புரிதலைத் தொடர்ந்து நடக்கும் சம்பவஙகள் அவர்கள் இருவரின் வாழ்க்கையையும் எப்படி தலைகீழாகப் புரட்டிப் போடுகிறது, என்பதை த்ரில்லும் மர்மமும் கலந்து பேசியிருக்கும் திரைப்படமே “மெரி கிறிஸ்துமஸ்”. ஆல்பர்ட் என்கின்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். அவருடைய திரைப்பயண வரலாற்றில் இப்படி ஒரு கதாபாத்திரம் அவர் செய்ததாக நினைவில்லை. புதிரான மர்மங்கள் நிறைந்த கதாபாத்திரம். தன் பாக்கெட்டில் எப்பொழுதும் இருக்கும் மோதிரத்தை எடுத்துக் காட்டி, தன் காதலியைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் தருணம் அலாதியானது. அதுபோல் இரண்டு மணி நேரங்களுக்கு முன்பு சந்தித்த மரியாவாகிய கத்ரீனா கைஃப் பேராபத்தில் சிக்கிக் கொள்ளும் போது, தன்னிலை மறந்து போய் உதவ முன்வந்து, பின்னர் தடுமாறி பின் தங்கும் இடத்தில்…
Read Moreஇந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்கில் போட்டியிடும் ஹைதராபாத் அணியின் உரிமையாளராகியிருக்கும் ‘குளோபல் ஸ்டார்’ ராம் சரண்
மும்பை டிசம்பர் 24 2023 – இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் ( ISPL) – ஒரு ஸ்டேடியத்தின் எல்லைக்குள் அமைக்கப்பட்ட டென்னிஸ் பந்து மூலம் விளையாடப்படும் T10 கிரிக்கெட் போட்டி. இந்த போட்டியில் விளையாடும் ஹைதராபாத் அணிக்கு ‘குளோபல் ஸ்டார்’ ராம் சரண் பெருமைக்குரிய உரிமையாளராகியிருக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பின் மூலம் இந்த போட்டியில் கலந்து கொண்டிருக்கும் ஏனைய பாலிவுட் சூப்பர் ஸ்டார்களின் பட்டியலில் ராம்சரணும் இணைந்திருக்கிறார். இந்த பட்டியலில் அக்ஷய் குமார் (ஸ்ரீநகர்) அணிக்கும், ஹிர்த்திக் ரோஷன் (பெங்களூரு) அணிக்கும், அமிதாப்பச்சன் (மும்பை) அணிக்கும் உரிமையாளராக இடம் பிடித்திருக்கிறார்கள். இதனால் நாடு முழுவதும் இந்த போட்டிக்கான ஆர்வத்தை கூட்டாக உயர்த்தியிருக்கிறது. ஐ எஸ் பி எல் உடன் ராம்சரண் இணைந்திருப்பது சாதாரணமான பார்ட்னர்ஷிப் அல்ல. இது நிஜாம் நகரத்தில் உள்ள வீரர்களுக்குள் இருக்கும்…
Read Moreசந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கி நடிக்கும் ‘தி பாய்ஸ்’ ( The Boys) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
இயக்குநரும், நடிகருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படத்திற்கு ‘தி பாய்ஸ்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான வெங்கட் பிரபு மற்றும் அவரது சகோதரர் பிரேம்ஜி ஆகியோர் இணைந்து வெளியிட்டிருக்கிறார்கள். ‘ஹர ஹர மஹா தேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘கஜினிகாந்த்’, ‘இரண்டாம் குத்து’, ‘பொய்க்கால் குதிரை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநரும், நடிகருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கி, கதையின் நாயகர்களுள் ஒருவராக நடித்திருக்கும் புதிய திரைப்படம் ‘தி பாய்ஸ்’. இந்தத் திரைப்படத்தில் அவருடன் ‘ஜெயிலர்’ ஹர்ஷத், ‘கலக்கப்போவது யாரு’ வினோத், ஷா ரா, யுவராஜ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அஹமத் ஷெரிப் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அருண் மற்றும் கௌதம் என இருவர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். சாம்…
Read More2024ல் நெட்ப்ளிக்ஸில் ஸ்டிரீமிங் செய்யப்படவிருக்கும் தமிழ்ப் படங்களின் பட்டியல்
பொங்கல் பண்டிகையை ஒட்டி 2024 ஆம் ஆண்டிற்கான நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது! பொங்கல் பண்டிகையை ஒட்டி நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் 2024 ஆம் ஆண்டில் தங்கள் தளத்தில் ஸ்ட்ரீமாக உள்ள காப்புரிமை பெற்ற ஒன்பது தமிழ்ப் படங்கள் குறித்தான பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் படங்கள் முதலில் திரையரங்குகளில் வெளியாகும். தங்களுக்குப் பிடித்த நடிகர்களின் நடிப்பை ரசிகர்கள் பெரிய திரையில் பார்த்து அனுபவித்தப் பின்னர், மீண்டும் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் குடும்பத்துடன் இல்லத்திலும் பார்த்து ரசிக்கலாம். இந்த 9 படங்களின் தலைப்பைத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது நெட்ஃபிலிக்ஸ். நடிகர் அஜித்தின் ‘விடாமுயற்சி’, நடிகர் கமல்ஹாசனின் ‘இந்தியன்2’, சிவகார்த்திகேயனின் அடுத்தப் படம் மற்றும் இன்னும் பல திரைப்படங்கள் இந்த வருடம் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. நெட்ஃபிலிக்ஸின் கண்டெண்ட்…
Read More2024ல் நெட்ப்ளிக்ஸில் ஸ்டிரீமிங் செய்யப்படவிருக்கும் தெலுங்குப் படங்களின் பட்டியல்
மகர சங்கராந்தி தினத்தை ஒட்டி நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் இந்த 2024 ஆம் ஆண்டுக்கான எதிர்பார்க்கப்படும் மாஸ் தெலுங்கு படங்களின் ஸ்லாட்டை அறிவித்துள்ளது! இந்த வருடம் , 2024ல் திரையரங்க வெளியீட்டிற்குப் பிறகு, 12 தெலுங்கு படங்கள் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக இருக்கிறது. நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் இந்த 2024 ஆம் ஆண்டிற்கான ஓடிடி உரிமம் பெற்ற 12 தெலுங்கு படங்கள் குறித்து அறிவித்துள்ளது. இந்தத் திரைப்படங்கள் திரையரங்க வெளியீட்டுக்குப் பிறகு இந்த ஆண்டு நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் திரையரங்குகளில் இந்தப் படத்தைப் பார்த்தப் பின்னர், தங்களுக்குப் பிடித்த நடிகர்களின் நடிப்பின் மாயாஜாலத்தை தங்களின் வீடுகளில் வசதியாகப் பார்க்கலாம். நெட்ஃபிக்ஸ் தங்களின் சமூக ஊடக தளங்களில் இந்த 12 தலைப்புகளின் ஸ்னீக் பீக் மூலம் உலகம் முழுவதும் உள்ள தெலுங்கு சினிமா ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.…
Read Moreசீரும் சிறப்புமாக நடைபெற்று முடிந்த ‘உழவர் விருதுகள் 2024’
கோலாகலத் திருவிழாவாக மாறிய ‘உழவன் ஃபவுன்டேஷனின் உழவர் விருதுகள் 2024’ – விவசாயத்துறையில் சாதனை படைத்த 5 ஆளுமைகளுக்கு கவுரவம்..!! விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுன்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2024’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகரும் ஓவியருமான சிவகுமார், நடிகை ரோகிணி, நடிகர் மற்றும் இயக்குநர் தம்பி ராமையா, நடிகர் பசுபதி மற்றும் நடிகை கீர்த்தி பாண்டியன் கலந்துக் கொண்டார்கள். இவர்களோடு மருத்துவர் கு.சிவராமன், பேராசிரியர் சுல்தான் அஹ்மது இஸ்மாயில், வேளாண் செயற்பாட்டாளர் பாமயன் மற்றும் OFM அனந்து ஆகியோரும் கலந்துக் கொண்டார்கள். மேலும் இந்நிகழ்வில் வேளாண் துறைசார் வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துக் கொண்ட இந்த விழா இனிதே நடைபெற்றது. இதில் • உழவர்களின் விளைப் பொருட்களுக்கு…
Read More‘தி கோட் லைஃப்’ மிகப்பெரிய சர்வைவல் அட்வென்சர் திரைப்படம்
பிராந்தியத்தை தாண்டி, மாநில எல்லையை தாண்டி இந்திய நடிகர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களின் படத்திற்கு விளம்பரம் செய்து உதவுவது மிகவும் ஆரோக்கியமான விஷயம். அந்த வகையில், ரசிகர்கள் நீண்ட நாட்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கும் தேசிய விருது பெற்ற பிளெஸி இயக்கத்தில், பிரித்விராஜ் சுகுமாரன் நடித்துள்ள ‘தி கோட் லைஃப்’ படத்தின் முதல் பார்வையை ’பாகுபலி’ மூலம் இந்திய ரசிகர்கள் எல்லோர் மனதையும் கவர்ந்த நடிகர் பிரபாஸ் வெளியிட்டுள்ளார். இந்தப் படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஏப்ரல்10, 2024 அன்று வெளியாகிறது. உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தை மிகப்பெரிய சர்வைவல் அட்வென்சர் என்கிறது படக்குழு. இதுபோன்ற சர்வைவல் அட்வென்சர் கதைகள் இந்திய சினிமாவில் அரிதாகவே வருகிறது. அதுவும் இது உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது என்பது இந்தப் படத்தை மேலும் சுவாரஸ்யமாக்குகிறது. இந்தப் படத்தின் முதல்…
Read More”மிஷன் சாப்டர் – 1 எனது சினிமா வாழ்க்கையில் நிச்சயம் ஒரு மைல்கல்” – எமி ஜாக்சன்
தமிழ் திரையுலகில் தனது அழகாலும் திறமையான நடிப்பாலும் பார்வையாளர்களின் இதயங்களை கொள்ளையடித்த நடிகை ஏமி ஜாக்சன், ‘மிஷன் சாப்டர் 1’ மூலம் தனது புதிய இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளார். விஜய் இயக்கத்தில், அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படம் ஜனவரி 12, 2024 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள படத்தின் புரோமோக்களில் நடிகை ஏமி ஜாக்சனின் ஆக்ஷன் அவதாரம் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர். இந்த படத்தில் நடித்த அனுபவத்தை நடிகை ஏமி பகிர்ந்துள்ளார். ஏமி ஜாக்சன் கூறியிருப்பதாவது, “இயக்குநர் விஜய் தனது திரைப்படங்களில் வலுவான பெண் கதாபாத்திரங்களை உருவாக்குபவர். இந்த கதாபாத்திரங்களின் தாக்கம் மிகவும் ஆழமானது. எந்தளவுக்கு தாக்கம் என்றால், திரைப்படங்கள் வெளியாகி பல ஆண்டுகளுக்குப் பிறகும் கூட பார்வையாளர்கள் அந்த கதாபாத்திரங்களை நினைவில் வைத்துக் கொள்கிறார்கள். அவருடைய ‘மதராசப்பட்டினம்’ படத்தின்…
Read More