மும்பையில் நடந்த டங்கி படச் சிறப்புத் திரையிடல்! பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் கலந்துகொண்டன !!

  சமீபத்தில் வெளியான டங்கி திரைப்படம் திரையரங்குகளை விழாக்கோலமாக மாற்றி வருகிறது. இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் இதயம் வருடும் இந்தப்படைப்பு, உலகம் முழுதும் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. மேலும் வெளிநாடுகளில் வசித்து வரும் என்ஆர்ஐ இந்தியர்களின் வாழ்வை, நெருக்கமாகப் பிரதிபலிக்கும் படைப்பாக, அவர்களை உணர்வுப்பூர்வமாக ஈர்த்துள்ளது டங்கி. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், பல்வேறு நாடுகளின் துணைத் தூதரகங்களுக்குச் சிறப்புத் திரையிடல் நடத்தப்பட்டது. பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் டங்கி திரைப்படத்தைப் பார்க்க ஆர்வமாக இருந்தன, இந்த படம் உண்மையில் அதன் அழுத்தமான கதையினால், ஒரு அழியாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது மற்றும் மக்களுக்குத் தேவையான கருத்தையும் சொல்லியுள்ளது. பலரும் இப்படத்தின் கதையைப் பாராட்டி வருகிறார்கள், குறிப்பாக, உலகளாவிய பார்வையாளர்கள் தங்கள் வாழ்வோடு பொருத்திப்பார்த்துக்கொள்ளும்படி அவர்களின் வாழ்வைப் பிரதிபலிக்கிறது இப்படம். சட்டத்திற்குப் புறம்பாக நாடு தாண்டுவதைப் பற்றிப் பேசும்…

Read More

திறமையான இளம் நடிகராக வலம் வரும் சத்தியமூர்த்தி !

  நடிகர் சத்தியமூர்த்தி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர். நடிகர் மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இருப்பவர். தப்புத் தண்டா படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் நடித்த ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற திரைப்படம் இந்த ஆண்டு வெளியானது. தற்போது முழுக்க முழுக்க யூடியூப் டீம் உருவாக்கியுள்ள புதிய படத்தில் நடித்துள்ளார். யூத் ரசிகர்களை கவரும் வகையில் எடுக்கப்பட்ட இப்படம் இந்த வாரம் வெளியாகிறது. வழக்கமான ஹாரர் பேய் படமாக இது இருக்காது என்கிறார். நடிகராக தொடர்ந்து தனது திறமையை நிரூபித்து வரும் இவரது நடிப்பில் 2024 ம் ஆண்டில் மேலும் இரண்டு படங்கள் வெளியாக உள்ளது. அது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் இருக்கும் என்றார்.

Read More