தமிழ் சினிமாவின் மெலோடி கூட்டணி என்று அழைக்கப்படுபவர்கள் இசையமைப்பாளர் இமான் மற்றும் இயக்குனர் பிரபு சாலமன்.. இவர்கள் இருவரும் தற்போது மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இணைந்துள்ளனர்.
இயக்குநர் பிரபு சாலமன் அடுத்ததாக MAMBO ‘மாம்போ’ என்ற படத்தை இயக்கவிருக்கிறார். இந்தப் படம் உண்மையான சிங்கத்தை வைத்து எடுக்கப்பட்ட முதல் ஆசியப் படம் என படக்குழு தெரிவித்துள்ளது.
படத்தில் நடிகர் விஜயகுமாரின் பேரனும், வனிதா விஜயகுமார் – ஆகாஷ் தம்பதிகளின் மகனுமான விஜய் ஸ்ரீ ஹரி நாயகனாக நடிக்கிறார்.
யோகிபாபு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
’பெண்ணின் மனதை தொட்டு’, ’தேவதையை கண்டேன்’, ’பேரரசு’ போன்ற சிறந்த திரைப்படங்களை தயாரித்த தமிழ் சினிமாவின் பாரம்பரியமிக்க தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான, தயாரிப்பாளர் எம்.காஜா மைதீனின் ‘ரோஜா கம்பைன்ஸ்’ நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரைப்பட தயாரிப்பை தொடங்கியுள்ளது.
இந்தப் படத்தின் டைட்டில் லாஞ்ச் சென்னையில் உள்ள பிரபல மாலில் நடைபெற்றது.. இதில் தன் பேரனை அறிமுகப்படுத்தி படக்குழுவினரை வாழ்த்தி பேசினார் நடிகர் விஜயகுமார்.
விஜயகுமார் பேசுகையில், “இந்த விழாவை மிகச் சிறப்பாக நடத்த முடியும் என்று இயக்குனர் பிரபு சாலமன் நிரூபித்துள்ளார். நிகழ்ச்சி வருகை தந்திருக்கும் ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
விஜய் ஶ்ரீஹரி வாழ்க்கையில் தன்னைத்தானே ஒவ்வொரு கட்டமாக மெருகேற்றினார்.
பின்னர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அவர்களை சந்தித்து, அவரது ஆலோசனையுடன் அவரது அப்பா நடிகர் ஆகாஷ் அவர்களது ஆசைக்கிணங்க பிரபு சாலமன் இயக்கத்தில், அவரை கதாநாயகனாக அறிமுகப்படுத்தலாம் என்று முடிவு எடுத்தோம். தயாரிப்பாளர் காஜா மைதீன் அவர்களது ஒத்துழைப்புடன் இந்த படம் மிகப்பெரிய படமாக வந்துள்ளது. அனைவரது ஆசியிலும் இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” என்றார்.
இறுதியாக நன்றி தெரிவித்து இயக்குனர் பிரபு சாலமன் பேசுகையில்..
“நான் குழந்தைகளுக்கான உலகத் தரத்திலான படம் எடுக்க வேண்டும் என்று விரும்புவேன். அப்படி ஒரு படம் தான் இது. தலைசிறந்த கதைக்கரு மீது நம்பிக்கை இருந்தது, மேலும் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் அவர்களிடம் கதையைக் கூறினேன்.
பிறகு படத்தின் தலைப்பு மற்றும் அறிமுக விழா இந்த அளவிற்கு சிறப்பாக நடைபெற்றது. எங்களது படக்குழுவும் தங்களது கடின உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். விரைவில் சிறப்பான இசை வெளியீட்டு விழாவில் சந்திப்போம். ஊடகத் துறையினரின் ஒத்துழைப்புக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
முன்னதாக மேடையில் இசை அமைப்பாளர் இமானின் லைவ் டைட்டில் மியூசிக் இசைக்கப்பட்டது.