இயக்குநர் ஆறுமுகக்குமாருடன் விஜய் சேதுபதி இணைந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் & டைட்டில் டீசர் வெளியீடு

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி இருக்கும் ‘VJS 51’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் இன்று மாலை வெளியிடப்படும் என படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகை ருக்மணி வசந்த், யோகி பாபு, பி. எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.‌ கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏ. கே. முத்து கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை ஆர். கோவிந்தராஜ் மேற்கொண்டிருக்கிறார். பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி…

Read More

”நான் படங்களில் நடிப்பேனா..? என்கின்ற ஒரு கேள்வி திரையுலகில் உலவி வருகிறது” – மதுவந்தி

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி K கணேஷ் தயாரிப்பில், ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்க, இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில், கலக்கலான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினர் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘P T சார்’ வரும் மே 24ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு,  படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. ‘P T சார்’ ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கும் 25 வது படமாகும், இதனைக் கொண்டாடும் விதமாக, மொத்தக்குழுவினரும் கேக் வெட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர். ஹிப்ஹாப் தமிழா ஆதி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வினில்… ஸ்டண்ட் இயக்குநர் மகேஷ் மேத்யூ  பேசியதாவது… ஹிப்ஹாப் ஆதிக்கு இது வித்தியாசமான படம், மற்ற படங்களிலிருந்து வித்தியாசமாக இருக்க வேண்டுமெனத் திட்டமிட்டு சில விசயங்கள் புதுமையாக…

Read More