தனஞ்ஜெயன் திரைக்கதையில் இரட்டை வேடத்தில் ஹன்சிகா நடிக்கும் காந்தாரி

தமிழ் சினிமாவில் மினிமம் கியாரண்டி வெற்றிப்பட இயக்குநர் ஆர்.கண்ணன். மணிரத்னத்திடம் உதவியாளராக பணியாற்றி, ‘ஜெயம்கொண்டான்’ படத்தின் மூலம் வெற்றிகர இயக்குநராக ஆரம்பித்து தயாரிப்பாளராகவும் மாறிய ஆர்.கண்ணன் தற்போது ஹன்சிகா மோத்வானி நாயகியாக நடித்துள்ள ‘காந்தாரி’ படத்தை இயக்கி தனது மசாலா பிக்ஸ் சார்பில் தயாரித்து இருக்கிறார். எமோஷனல் ஹாரர் திரில்லர் ஆக உருவாகியுள்ள இந்தப்படத்திற்கு தொல்காப்பியனின் கதையை எடுத்துக்கொண்டு அதில் பல கமர்ஷியல் அம்சங்களை சேர்த்து திரைக்கதை எழுதியுள்ளார் ஆர்.கண்ணனின் நண்பரும் தயாரிப்பாளருமான தனஞ்செயன். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவை மேற்கொள்ள எல்.வி.முத்து கணேஷ் இசை அமைக்கிறார்கள். தற்போது ஹன்சிகாவின் வித்தியாசமான தோற்றத்துடன் இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து காந்தாரி படத்தின் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. இதில், படத்தின் கதாசிரியரான தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது, “கண்டேன் காதலை படத்தில் ஆரம்பித்து கண்டேன் கண்ணனை என அவருடனான நட்பு…

Read More

’அஞ்சாமை’ நாம் எதற்கு அஞ்ச கூடாது என்பதை சொல்லும் படம்” – பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா

பல்வேறு வெற்றி படங்களை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், முழுமையாக ஒரு படத்தினை வாங்கி வெளியிடும் படம் ‘அஞ்சாமை’. இதனை திருச்சித்ரம் சார்பில் டாக்டர் திருநாவுக்கரசு தயாரித்துள்ளார். மோகன் ராஜா, லிங்குசாமி உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த எஸ்.பி.சுப்புராமன் இதனை இயக்கியுள்ளார். விதார்த், வாணி போஜன், ரகுமான், கிருத்திக் மோகன், பாலசந்திரன் ஐஏஎஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு கார்த்திக் ஒளிப்பதிவு செய்ய, பாடல்களுக்கு ராகவ் பிரசாத் இசையமைக்க, கலா சரண் பின்னணி இசையமைத்துள்ளார். வரும் ஜூன்-7ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதனை முன்னிட்டு அஞ்சாமை படக்குழுவினர் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசும்போது, “இந்தப் படத்தில் பேசக்கூடிய விஷயம் இப்போதும் கூட நம் சமூகத்தில் நிகழ்ந்து கொண்டு…

Read More