ஐந்து முருக பக்தர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் ஆன்மீகப்படம்

முருகக் கடவுள் எப்போது யாரை ஆட்கொள்வார் என்பது யாருக்கும் தெரியாது. அவ்வாறு ஆட்கொள்ளப்பட்ட ஒருவரை பற்றி தான் நாம் இப்போது பார்க்க போகிறோம். வலதுசாரி அரசியல்வாதியாகவும் திரைப்பட தயாரிப்பாளர், நடிகர் மற்றும் விநியோகஸ்தராகவும் பரபரப்பாக இயங்கி வந்த ஜெ எஸ் கே கோபி என்று அழைக்கப்படும் ஜெயம் எஸ் கே கோபி, இன்று ஒரு முழு நேர முருக பக்தர். தமிழ் கடவுளான ஆறுமுகனின் புகழை தனது இடைவிடாத செயல்பாடுகள் மூலமும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் அகிலமெங்கும் பரப்பி வரும் ஜெயம் கோபியின் வாழ்க்கை பயணத்தை மாற்றி அமைத்தது 2023ம் ஆண்டு செப்டம்பரில் நண்பருடன் அவர் மேற்கொண்ட இமயமலை பயணம் தான். இதைத்தொடர்ந்து முருகரின் மகிமைகள் குறித்து தொடர்ந்து பேட்டிகள் அளித்து வந்த ஜெயம் கோபி, திடீரென்று ஒரு நாள் முருகர் உத்தரவிட்டதாக கூறி அரசியலில் இருந்து…

Read More

வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்ட ஹரா படத்தின் தயாரிப்பாளர்கள்

விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் தயாரிப்பில் எல்மா பிக்சர்ஸ் என் எத்தில்ராஜ் வெளியீட்டில் ‘வெள்ளி விழா நாயகன்’ மோகன் நடிப்பில் ஜூன் 7 அன்று உலகெங்கும் வெளியான ‘ஹரா’, திரையரங்குகளில் தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது.   திரைக்கு வந்து இரண்டு வாரங்களுக்கு பிறகும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘ஹரா’, அனைத்து தரப்பு ரசிகர்களை குறிப்பாக பெண்கள் மற்றும் இளம் தலைமுறையினரை ஈர்த்து வருகிறது. இதன் மூலம் இன்றும் அவர் ‘வெள்ளி விழா நாயகன்’ தான் என்பதை மோகன் நிரூபித்துள்ளார். தொடக்கத்தில் தமிழகத்தில் 150-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான ‘ஹரா’, ரசிகர்களின் வரவேற்பை தொடர்ந்து இன்னும் அதிகமான திரைகளில் திரையிடப்பட்டது. இது தவிர மலேசியா, ஐரோப்பா, லண்டன் மற்றும் இலங்கை உள்ளிட்ட பகுதிகளிலும் இத்திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.…

Read More