காம்தார் நகருக்கு எஸ். பி பாலசுப்பிரமணியன் சாலை என்று பெயரிட அறிவித்துள்ள தமிழக அரசுக்கு நன்றிகள் – இயக்குநர் பாரதிராஜா

வணக்கம், காம்தார் நகருக்கு காந்தக் குரலோனின் பெயர் வைத்தது ஆகப் பொருத்தமான செயல். நாம் கடந்து வரும் நண்பர்கள் பிரிந்து போனதும் அவர்களைச் சுற்றிய நினைவுகளையும் சேர்ந்து கடந்துவிடுகிறோம். அப்படியில்லாமல் கடந்துபோன நிகழ்வுகளை மீட்டுத் திரும்பவும் வைத்துக்கொள்வதில் இருக்கிறது நம் பேரன்பு. அப்படி நம்மிடையேயும், காற்றோடும் இவ்வுலகின் அலையோடும் கலந்து நிற்பவர் இசைக் குரலோன் பத்மஸ்ரீ பத்ம விபூஷன் எஸ். பி. பி . அவர் வாழ்ந்த காம்தார் நகருக்கு எஸ். பி பாலசுப்பிரமணியன் சாலை என்று பெயரிட. அறிவித்துள்ள தமிழக அரசுக்கும்…மாண்புமிகு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகின் சார்பில் நன்றிகள். தமிழ்த் திரையுலகிற்கு முதல்வர் அவர்கள் செய்துவரும் நலன்களும்… திரைத்துறையினரின் மீது கொண்டுள்ள அன்பும்… அவர்களுக்காக முன்னின்று செய்யும் ஆக்கமிகு செயல்களும் மிக மிக நன்றிக்குரியவை. மிகப்பெரும் நன்றிக்…

Read More

மெய்யழகன் விமர்சனம்.. உறங்காத உறவுகள் 4.5/5

கதை.. தஞ்சாவூர் மாவட்டத்தில் நீடாமங்கலம் பகுதியில் குடும்பத்தோடு வசித்து வருகிறார் அரவிந்த்சாமி.. சொத்து பிரச்சனை காரணமாக இவரது குடும்பம் தனித்துவிடப்பட பெற்றோருடன் சென்னையில் குடியேறுகிறார். திருமணம் ஆகி மனைவி தேவதர்ஷினி மற்றும் மகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் அரவிந்தசாமி ஒரு கட்டத்தில் தன் சித்தி மகள் திருமணத்திற்காக தன் சொந்த ஊருக்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. கிட்டத்தட்ட 22 வருடங்களுக்குப் பிறகு சொந்த ஊருக்கு செல்லும் அரவிந்தசாமி அங்கு கார்த்தியை சந்திக்கிறார். சிறு வயது முதலே அரவிந்த்சாமி மீது அதீத பாசம் கொண்ட கார்த்தி விழுந்து விழுந்து கவனிக்கிறார்.. ஆனால் கார்த்தி யார் என்று கூட தெரியாமல் வேறு வழி இல்லாமல் அவருடன் கொஞ்சமாக பேசுகிறார்.. போன் நம்பர் கொடுப்பதை கூட தவிர்க்கிறார். இவர் யார்.. இவர் நமக்கு எதற்காக செய்ய வேண்டும்.. அத்தான் அத்தான் என்று…

Read More