உலக கார்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ளும் ரிவான் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார் !!

கார்டிங் ரேஸ் போட்டிகளில் இந்திய அளவிலான போட்டிகளில் சாதனை படைத்தவரும், பஹ்ரைனில் உள்ள சாகிர் இன்டர்நேஷனல் எஃப்1 சர்க்யூட்டில் நடைபெறும் உலக கார்டிங் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நாட்டின் சார்பில் கலந்துகொள்ளவுள்ள விளையாட்டு வீரர், மரியாதை நிமித்தமாக தமிழகவிளையாட்டுத்துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். 7 முறை தேசிய சாம்பியனான ப்ரீதம் தேவ் மோசஸின் மகன் ரிவான் தேவ் ப்ரீதம் 2022 ஆம் ஆண்டு FMCSI தேசிய கார்டிங் சாம்பியன்ஷிப்பில் ஒரு புதிய வீரராக கார்டிங்கைத் தொடங்கினார். 2023 ஆம் ஆண்டில், பெங்களூர் கார்டோபியா சர்க்யூட்டில் நடைபெற்ற 3 சுற்று சாம்பியன்ஷிப் போட்டியான மெக்கோ மெரிட்டஸ் கோப்பை போட்டியில் 10 வயது சிறுவனான ரிவான் கலந்துகொண்டார். ரிவான் 6 பந்தயங்களில் 3ல் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். பிறகு சமீபத்தில் முடிவடைந்த…

Read More