அமைச்சர் ஜெயக்குமாரை கட்டியணைத்து முத்தம் கொடுத்த பெண்!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம் தொகுதியில் ஏழாவது முறையாக அமைச்சர் ஜெயக்குமார் தேர்தலை சந்திக்கிறார்.ஏற்கனவே நடந்து முடிந்த ஆறு தேர்தலில் ஐந்து முறை அதே தொகுதியில் வெற்றி பெற்று மக்களின் செல்லப்பிள்ளையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் காலை தொடங்கி இரவு வரையிலும் வீதி தோறும், வீடுகள் தோறும் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.நேற்று பஜனை தெருவில் அவர் பிரச்சாரத்திற்காக வந்தபோது உள்ள கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு பெண்மணி அவர் அருகே வந்து அவள் கையை பிடித்து, “எங்க தெய்வம் நீதானய்யா நீதானய்யா கொரோனா காலத்துல எல்லா  உதவியும் செஞ்சு எங்கள காப்பாத்துன  தெய்வம் நீ தான நீ ஜெயிக்கணும்ய்யா  என்று சொல்லி ஜெயக்குமாரின் கைகளை பற்றிக் கொண்டார். அங்கிருந்த அனைவரும் இந்த காட்சியை பார்த்து…

Read More

அதிமுக வேட்பாளர் வாக்குறுதி நீதிமன்றம் உத்தரவு

வாக்காளர்களுக்குத் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிப்பதாகக் கூறி வாக்குச் சேகரிப்பில் ஈடுபடும் அதிமுக வேட்பாளருக்கு எதிரான புகாரை பரிசீலித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் ஜெயராஜ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், ஒட்டன்சத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் என்.பி.நட்ராஜ் போட்டியிடுகிறார். அவர், தனக்கு வாக்கு அளித்தால், தனது உறவினர்களுக்குச் சொந்தமான மூன்று மருத்துவமனைகளில் இலவச மருத்துவச் சிகிச்சை வழங்குவதாகக் கூறி, வாக்குச் சேகரித்துவருகிறார். இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று(மார்ச் 26) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு…

Read More