மழையில் நனைகிறேன் -திரை விமர்சனம்

பட்டப்படிப்பை முடிக்காமல் நண்பர்களுடன் வெட்டியாக ஊர் சுற்றி வரும் பணக்கார இளைஞன் அன்சன் பால்.அமெரிக்கா சென்று மேற்படிப்பை முடிக்க அதற்கான ஆயத்த வேலைகளில் ஈடுபடும் நாயகி பிரபா ஜான்.ஒரு மழை நேர பொழுதில் நாயகியை சந்திக்கும் நாயகனுக்கு பார்த்ததுமே காதல் பற்றிக்கொள்ள, அவள் கண்ணில் படும் போதெல்லாம் காதலை சொல்ல முற்படுகிறான், அதற்காக அவளை விடாமல் துரத்துகிறான். ஒரு கட்டத்தில் நாயகனின் அணுகுமுறை பிடிக்காத நாயகி எதற்காக இந்த தொடரல் என்று விசாரிக்கிறாள்.நாயகன் காதலை சொல்ல, நாயகியோ தன் அமெரிக்க கனவை சொல்லி என்னை மறந்து விடு என்கிறாள். ஆனால் நாயகனோ, நீ என் காதலை ஏற்றுக் கொள்ளும் வரை உன்னை தொடர்வது நிற்காது என்று அடம் பிடிக்க…ஒரு கட்டத்தில் நாயகியும் காதலுக்கு ஓகே சொல்ல முடிவு செய்கிறாள். அதற்காக அவனுடன் குறிப்பிட்ட இடத்திற்கு பைக்கில் பயணம்…

Read More

ஜனவரி 31, 2025 அன்று வெளியாகும் பான் இந்திய திரைப்படம் “அகத்தியா”

டாக்டர். ஐசரி கே. கணேஷ் அவர்களால் துவங்கப்பட்ட, தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், அனீஷ் அர்ஜுன் தேவ் அவர்களின் வாமிண்டியா நிறுவனத்துடன் இணைந்து, தயாரிக்கப்பட்ட திரைப்படம் “அகத்தியா”. “ஏஞ்சல்ஸ் வெர்சஸ் டெவில்” என்ற வசீகரிக்கும் கதைக்கருவுடன், அதிநவீன CGI உடன் இதயப்பூர்வமான மனித உணர்வுகளைக் கலந்து, திகில், திரில்லர் பாணியில், அனைவரும் ரசிக்கும் வகையில், ஒரு புதுமையான உலகைப் படைத்திருக்கும் “அகத்தியா” படத்தினை புகழ்பெற்ற பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ளார். மிகப்பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும் தென்னிந்தியப் பிரம்மாண்ட திரைப்படமான “அகத்தியா” திரைப்படத்தின் அற்புதமான டைட்டில் லோகோ வீடியோவை, தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். பிரமிக்க வைக்கும் காட்சியமைப்புகள் மற்றும் முதுகுத்தண்டைச் சில்லிட வைக்கும் இசை என, இப்படத்தின் டைட்டில் லோகோ வீடியோ ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்துள்ளது – நான்கு மொழிகளில்…

Read More