எனக்கும், மேற்கண்ட இன்ஸ்டாகிராம் பக்கம் மற்றும் கைபேசி எண்ணுக்கும் எந்த தொடர்பும் இல்லை

எனக்கும், மேற்கண்ட இன்ஸ்டாகிராம் பக்கம் மற்றும் கைபேசி எண்ணுக்கும் எந்த தொடர்பும் இல்லை.   இத்தனை வருடங்களாக நீங்கள் எனக்கு அளித்து வரும் ஆதரவுக்கு எனது இதயப்பூர்வ நன்றி. எனது திரைப்படங்களான மாயா மற்றும் கேம் ஓவரை உலகெங்கும் உள்ள ரசிகர்களிடையே கொண்டு சேர்த்ததில் ஊடகங்களின் பங்கு மதிப்புமிக்கது. எனது பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை (AshwinMaaya) ஒருவர் தொடங்கி, மாயா திரைப்படத்தின் இயக்குநர் தாம் தான் என்றும், அதர்வா நடிக்கும் படமொன்றை தற்போது இயக்கி வருவதாகவும், கதாநாயகிக்கான தேடுதல் நடந்து வருவதாகவும் பல்வேறு நடிகைகளுக்கு தகவல்கள் அனுப்பி வருவதாக எனது திரையுலக நண்பர்கள் அனுப்பிய ஸ்கிரீன்ஷாட்டுகள் மூலம் அறிந்தேன். நடிகை ஒருவர் அவருக்கு பதில் அனுப்பிய போது, ‘அஷ்வின் மாயா’ இன்ஸ்டாகிராம் பக்கத்தை இயக்கி வரும் அந்த நபர் தனது கைபேசி எண்ணை (9952116844) கொடுத்ததாகவும்,…

Read More

சமூக பிரச்சனைகள் பற்றி பேசும் பேண்டஸி திரைப்படமாக உருவாகும் ‘மாயமுகி’

சமூக பிரச்சனைகள் பற்றி பேசும் பேண்டஸி திரைப்படமாக உருவாகும் ‘மாயமுகி’ “அவள் பெயர் தமிழரசி” பட கதாநாயகியின் “மாயமுகி” டிபிகே இண்டர்நேஷ்னல் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடேட் சார்பில் டில்லி பாபு.கே தயாரிக்கும் படம் ‘மாயமுகி. சமூக பிரச்சனைகள் பற்றி பேசும் பேண்டஸி திரைப்படமாக உருவாகும் இப்படத்தை பி.எம்.ரவி நாயக் இயக்குகிறார். கதாநாயகியை மையப்படுத்திய இப்படத்தில், ’இன்னொருவன்’, ‘அவள் பெயர் தமிழரசி’, ‘நீர்ப்பறவை’, ’வீரம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் மனோ சித்ரா நாயகியாக நடிக்கிறார். கதாநாயகனாக ரவிதேஜா வர்மா நடிக்கிறார். தமிழில் இவருக்கு இதுதான் முதல் படம் என்றாலும், தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். இவர்களுடன் சத்யதேவ், ‘தூத்துக்குடி’ பட புகழ் கார்த்திகா, ஆம்னி, சுவாதி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். தமிழ் சினிமாவில் பேண்டஸி திரைப்படங்களின் வருகை மிக மிக அரிதாகி வரும் நிலையில்,…

Read More