எனக்கும், மேற்கண்ட இன்ஸ்டாகிராம் பக்கம் மற்றும் கைபேசி எண்ணுக்கும் எந்த தொடர்பும் இல்லை

எனக்கும், மேற்கண்ட இன்ஸ்டாகிராம் பக்கம் மற்றும் கைபேசி எண்ணுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

 

இத்தனை வருடங்களாக நீங்கள் எனக்கு அளித்து வரும் ஆதரவுக்கு எனது இதயப்பூர்வ நன்றி. எனது திரைப்படங்களான மாயா மற்றும் கேம் ஓவரை உலகெங்கும் உள்ள ரசிகர்களிடையே கொண்டு சேர்த்ததில் ஊடகங்களின் பங்கு மதிப்புமிக்கது.

எனது பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை (AshwinMaaya) ஒருவர் தொடங்கி, மாயா திரைப்படத்தின் இயக்குநர் தாம் தான் என்றும், அதர்வா நடிக்கும் படமொன்றை தற்போது இயக்கி வருவதாகவும், கதாநாயகிக்கான தேடுதல் நடந்து வருவதாகவும் பல்வேறு நடிகைகளுக்கு தகவல்கள் அனுப்பி வருவதாக எனது திரையுலக நண்பர்கள் அனுப்பிய ஸ்கிரீன்ஷாட்டுகள் மூலம் அறிந்தேன்.

நடிகை ஒருவர் அவருக்கு பதில் அனுப்பிய போது, ‘அஷ்வின் மாயா’ இன்ஸ்டாகிராம் பக்கத்தை இயக்கி வரும் அந்த நபர் தனது கைபேசி எண்ணை (9952116844) கொடுத்ததாகவும், திரைப்பட வாய்ப்புக்காக ‘தவறிழைக்க’ அழைத்ததாகவும் தெரிய வருகிறது.

எனக்கும், மேற்கண்ட இன்ஸ்டாகிராம் பக்கம் மற்றும் கைபேசி எண்ணுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது எந்தவிதமான நடிகர்/நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கான தேர்விலும் நான் ஈடுபட்டிருக்கவில்லை. எனவே, இத்தகைய நபர்களிடம் உரையாடலை தொடங்கும் முன் அவர்கள் பின்னணி குறித்து தீர ஆராயுமாறு அனைத்து நடிகர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

என்னுடைய திரைப்படங்களுக்காக எதிர்காலத்தில் நடிகர்/நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கான தேடுதலில் நான் ஈடுபட்டால், அவர்களை முறையாக என்னுடைய குழுவோ அல்லது தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்தவர்களோ அணுகுவார்கள்.

மேற்கண்ட நபர் குறித்து காவல் துறையில் புகாரளிப்பதற்காக எனது வழக்கறிஞர் குழுவிடம் நான் தொடர்பு கொண்டுள்ளேன்.

எனது எதிர்கால முயற்சிகளுக்கும் ஊடக நண்பர்களாகிய நீங்கள் ஆதரவளிப்பீர்கள் என நம்புகிறேன்.

நன்றி,

தங்கள் உண்மையுள்ள

அஷ்வின் சரவணன்

 

First of all, I would like to extend a heart-felt thank you for the support you have provided me over the years. The media has been invaluable in promoting both of my films – Maya & Game over, taking it to the audience across the globe.

Recently, I came to understand, through a few screenshots received by my colleagues in the film fraternity, that a fake profile by the name of ‘AshwinMaaya’ on Instagram has been texting multiple actresses, claiming he is the director of Maya and that he is currently directing a film with actor Atharva and that they are looking out for a heroine.

Once the actresses respond to it, the person operating the page ‘AshwinMaaya’ shares his phone number (9952116844) asking for exploitative favours, in return for opportunities in the film. I would like to reiterate that this is not my Instagram post/ page/ phone number.

I would also like to clarify that I neither have any prior connection to the person impersonating me nor have I initiated any casting calls. I kindly request all actors to thoroughly verify the profile before engaging in such conversations.

If at all I am in the look out for any actor/ actress for my projects in future, the said person will be approached formally by my team or the production company I am working with. I would like to add that I’ve contacted my legal team and a formal police complaint has been filed and the needful action will be taken.

I hope that my media friends will to continue to offer their support in all my future endeavour.

Related posts

Leave a Comment