திமுக தொண்டர்களுக்கு கருணாநிதி கடிதம் எழுதுவதை தன்னுடைய வழக்கமாக கொண்டிருருந்தார். உடன்பிறப்பே என்று தொடங்கும் அந்த வரிகளில் தான் கோடிக்கணக்கான தொண்டர்களை தன்வசப்படுத்தி இருந்தார். அதேபோல இப்போது அமைச்சர் ஜெயக்குமார் தன் ராயபுரம் தொகுதி மக்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை வீடுதோறும் அனுப்பியுள்ளார்.அந்தக் கடிதத்தில் இடம் பெற்றுள்ள வரிகள் இதோ! என்னுடலின் உயிர்மூச்சாய் என்னை இயக்கிக் கொண்டிருக்கும் ராயபுரம் தொகுதி சொந்தங்களே! 1991 முதல் இதே தொகுதியில் உங்கள் பெருவாரியான ஆதரவோடு சட்டமன்ற உறுப்பினராக இப்போது வரை இருந்து கொண்டிருக்கிறேன். இதோ இந்த முறை ஏழாவது தடவையாக புரட்சித்தலைவர், இதயதெய்வம் அம்மா ஆகியோர் நல்லாசியுடன் உங்கள் வேட்பாளராக உங்களை தேடி வருகிறேன். நினைவிருக்கிறதா? இத்தனை ஆண்டுகளில் எத்தனை தேர்தல் வந்தபோதும் தேர்தல் நேரத்தில் மட்டும் உங்களை சந்திக்க நான் வருகிறேன். யோசித்துப் பாருங்கள்,இராயபுரம் மக்களின் எல்லா சுக…
Read MoreDay: March 25, 2021
உதயநிதி நேர்மையாளர் இல்லை – கமலஹாசன்
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதே மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கும், திமுக இளைஞரணிச் செயலாளராக பிறகு பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கும் வார்த்தை போர் நடந்தது. கிராமசபை உள்ளிட்ட திமுக தனது வாக்குறுதிகளை காப்பியடிப்பதாக கமல்ஹாசன் கூறியிருந்த நிலையில், “நாங்கள் இதையெல்லாம் ஐம்பது ஆண்டுகளாக நடத்திக் கொண்டிருக்கிறோம். ஐம்பது ஆண்டுகளாக கமல்ஹாசன் தூங்கிக் கொண்டிருந்தாரா?”என்று கேள்வி எழுப்பினார் உதயநிதி. இந்நிலையில் இந்த மோதல் சட்டமன்றத் தேர்தலிலும் தொடர்கிறது. திமுக மீது தொடர்ந்து தன் பிரச்சாரத்தில் குற்றம் சாட்டி வரும் கமல்ஹாசன் நேற்று (மார்ச் 24) தனது கோவை தெற்கு தொகுதிக்கென சிறப்பு தேர்தல் உறுதிமொழிகளை அறிவித்தார். அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் உதயநிதி பற்றி கேட்கப்பட்டபோது, “நான் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் படம் நடித்திருக்கிறேன்.. அதற்காக பணம் வாங்கியிருக்கிறேன். அப்போது கூட இது சரியான பணமா என்று…
Read More