தேசிய விருதுகளால் தமிழ் சினிமா தலைநிமிர்ந்து நிற்கிறது – பாரதிராஜா

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவரும், மூத்த இயக்குனருமான பாரதிராஜா தேசிய விருது பெற்ற தமிழ் திரையுலக கலைஞர்களை வாழ்த்தி, பாராட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்சினிமாவைபெருமைப்படுத்திய தேசிய விருது பெற்ற கலைஞர்கள் தேசிய அளவிலான அங்கீகாரம் ஒவ்வொரு கலைஞனுக்குமான எதிர்பார்ப்பாக இருக்கும். கடின உழைப்பை மதிக்க வேண்டும்… அந்த உழைப்பு தேசிய அளவில் உச்சி நுகரப்பட வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அவ்விருதை ஏற்புடைய கலைஞர்கள் பெறும்போது தமிழ் சினிமா தலை நிமிர்கிறது. 2019-ல் வெளியான படங்களில் எல்லோரையும் அசத்தியெடுத்த படம் ‘அசுரன்’.  அதோடு இன்னும் சில நல்ல படங்களும் தேர்வில் கலந்துகொண்டன. நம் தமிழ் சினிமாவில் நல்ல சினிமாக்கள் பிறந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் 2019 ஆண்டில் நமக்கு நெருக்கமான படமான அசுரன் படத்திற்காக சிறந்த நடிகர் விருது அசுர உழைப்பாளன் தனுஷூக்கு கிடைத்தது உண்மையிலேயே…

Read More

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் 125 நாட்களை கடந்தது

125 நாட்களுக்கும் மேலாக டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் செய்து வருகிறார்கள். மத்திய அரசு கொண்டு வந்த 3 விவசாய சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சிங்கு, டிக்கிரி, காசிப்பூர் பகுதியில் இவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். டெல்லியில் நடந்து வரும் இந்த விவசாயிகள் போராட்டம் நாட்டையே உலுக்கி உள்ளது. டெல்லி எல்லையில் தற்போது போராடி வரும் விவசாயிகள் டெல்லி எல்லையை தாண்டி உள்ளே சென்று மீண்டும் போராட்டம் நடத்தும் திட்டத்தில் உள்ளனர். குடியரசு தினத்தின் போது டெல்லிக்குள் இவர்கள் சென்றது போல மீண்டும் உள்ளே செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  டெல்லி எல்லையில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து 120-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி எல்லையில் தற்போது போராடி வரும்…

Read More