டெல்லியில் விவசாயிகள் போராட்டம் 125 நாட்களை கடந்தது

125 நாட்களுக்கும் மேலாக டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் செய்து வருகிறார்கள். மத்திய அரசு கொண்டு வந்த 3 விவசாய சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

சிங்கு, டிக்கிரி, காசிப்பூர் பகுதியில் இவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். டெல்லியில் நடந்து வரும் இந்த விவசாயிகள் போராட்டம் நாட்டையே உலுக்கி உள்ளது.

டெல்லி எல்லையில் தற்போது போராடி வரும் விவசாயிகள் டெல்லி எல்லையை தாண்டி உள்ளே சென்று மீண்டும் போராட்டம் நடத்தும் திட்டத்தில் உள்ளனர். குடியரசு தினத்தின் போது டெல்லிக்குள் இவர்கள் சென்றது போல மீண்டும் உள்ளே செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  டெல்லி எல்லையில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து 120-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டெல்லி எல்லையில் தற்போது போராடி வரும் விவசாயிகள் டெல்லிக்குள் சென்று மீண்டும் போராட்டம் நடத்தும் திட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது

Related posts

Leave a Comment

twenty − 15 =