டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி & சரஸ்வதி சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சாந்தகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அர்ஜூன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள திரைப்படம் ‘ரசவாதி’. மே 10 அன்று திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவண்ட் இன்று நடைபெற்றது. எடிட்டர் சாபு ஜோசப், ” இயக்குநர் சாந்தகுமார் முதல்முறையாக ஒரு காதல் படம் செய்துள்ளார். இவ்வளவு நாட்கள் வில்லனாக பார்த்து வந்த அர்ஜூன் தாஸ் சாக்லேட் பாயாக நடித்திருக்கிறார். சுஜித் வில்லனாக மிரட்டியிருக்கிறார். லவ், ஆக்ஷன் என படம் சிறப்பாக வந்திருக்கிறது. உங்கள் ரெஸ்பான்ஸூக்காகக் காத்திருக்கிறேன்” என்றார். நடிகர் அருள்ஜோதி, “‘மெளன குரு’ தான் எனக்கு முதல் படம். ‘மகாமுனி’ படத்தில் சாந்தகுமார் சார் கூப்பிட்டபோது எனக்கு அந்த கதாபாத்திரம் செட் ஆகவில்லை. அதற்கெல்லாம் சேர்த்து இந்தப் படத்தில் வெயிட்டான கதாபாத்திரம் கொடுத்துள்ளார். அவருக்கு…
Read MoreDay: May 7, 2024
அதர்வா-வின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ‘டி.என்.ஏ’ பட பர்ஸ்ட் லுக்
‘டாடா’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஒலிம்பியா மூவிஸ் எஸ் அம்பேத் குமார் தயாரிக்கும் ‘டிஎன்ஏ’ படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘மான்ஸ்டர்’, ‘ஒரு நாள் கூத்து’, ‘ஃபர்ஹானா’ படப்புகழ் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் எழுதி இயக்கும் இந்தப் படத்தில் நடிகர் அதர்வா முரளி கதாநாயகனாக நடிக்கிறார். விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட ‘சித்தா’ படத்தில் தனது சிறப்பான நடிப்பிற்காக பாராட்டுகளைப் பெற்ற நிமிஷா சஜயன், கதாநாயகியாக நடிக்கிறார். அதர்வா முரளியின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் அதர்வா முரளியின் புதிய தோற்றம் ரசிகர்கள் மத்தியில் படம் குறித்தான ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது. இயக்குநர் நெல்சன் தனது வெவ்வேறு ஜானர்களைத் தனது முந்தையப் படங்களில் முயற்சி செய்து வெற்றியும் கண்டவர். இவருடன் ‘டிஎன்ஏ’ படத்தில் திறமையான நடிகர்கள்…
Read More