கனவுக் கல்வி ! கட்டணமின்றி! “திரைகள் வழி சமத்துவம் நோக்கி” என்ற நோக்குடன் செயல்பட்டு வரும் , இயக்குனர் வெற்றிமாறனின் பன்னாட்டு திரை- பண்பாடு ஆய்வகம் வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் (விஸ்டாஸ்) இணைந்து தனித்துவமான, படைப்புலகத்திற்கான பாதையை அறிமுகம் செய்யும் திரைப்படக் கல்வியில் மூன்றாண்டு இளங்கலைப் பட்டப்படிப்பை ( B.Sc., Film studeis) 100% உதவித்தொகையுடன் வழங்குகிறது. விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. +2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம் . முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உங்கள் திரைத்துறை கனவை நனவாக்க அரிய வாய்ப்பு! B.Sc Film Studies (3 year Degree Course) https://iifcinstitute.com/admission/
Read MoreDay: May 14, 2024
அடையாரில் மற்றொரு நடனப்பள்ளி துவங்கிய கிகி சாந்தனு
சின்னத்திரை தொகுப்பாளினி- நாட்டிய மங்கை -நடிகை- என பன்முக திறன் கொண்ட திருமதி கிகி சாந்தனு பாக்கியராஜ் சென்னை அடையாறில் ‘ ‘கிகி’ஸ் டான்ஸ் ஸ்டூடியோ’ எனும் பெயரில் இரண்டாவது நாட்டிய பயிற்சி பள்ளியை தொடங்கினார். இதற்காக நடைபெற்ற தொடக்க விழாவில் தமிழ் திரையுலகத்திலிருந்து ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். நாட்டியம், நடனம் என்பது இளம் வயதினருக்கு அவர்களின் திறமைக்கேற்ப வாய்ப்பு வழங்கும் கலையாக இருந்தாலும்.. அவர்களின் உடல் ஆரோக்கியத்தையும், மன வலிமையையும், சமூகத்துடன் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் கலையாகவும் திகழ்கிறது. இதனால் நாட்டிய பயிற்சி பள்ளிகளில் தங்களது குழந்தைகள் நாட்டிய பயிற்சியைப் பெற பெற்றோர்கள் மனமுவந்து அனுமதி அளிக்கிறார்கள். சிறார்களும், சிறுமிகளும் தங்களின் மன அழுத்தத்திலிருந்து விடுதலை பெறவும், கவன சிதறலிலிருந்து ஒருமுகமான கவனத்தை பெறவும், உத்வேகத்துடன் தொடர்ந்து…
Read More