நந்தன் – திரைவிமர்சனம்

கதை… புதுக்கோட்டை மாவட்டம் வனங்கான்குடி என்ற பகுதியில் நடக்கும் அரசியலை மையப்படுத்தி இந்த படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் இரா சரவணன்.. போட்டியே இல்லாத ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார் பாலாஜி சக்திவேல்… இவரது வீட்டில் அப்பாவுக்கு பணிவிடை செய்யும் ஒரு வேலையாளாக இருக்கிறார் சசிகுமார்… இவர்களின் பகுதி தலித்துகளுக்கான ரிசர்வ் பகுதியாக மாற்றப்படுகிறது. இதனை அடுத்து வேறு வழி இன்றி தன் வீட்டில் பணிபுரியும் சசிகுமாரை ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் போட்டியிட வைத்து ஒருமனதாக தேர்ந்தெடுக்கிறார். பாலாஜி சக்தி வீட்டில் வேலை செய்த சசிகுமார் ஊராட்சி மன்ற தலைவரான பின்னர் என்ன நடந்தது என்பதுதான் மீதிக்கதை. நடிகர்கள்.. சசிகுமார் தன்னுடைய முழு உழைப்பை கொடுத்து அம்பேத்குமார் என்ற கேரக்டரை அசத்தலாக வடிவமைத்து இருக்கிறார்.. ஒரு கமர்சியல் ஹீரோ இந்த அளவிற்கு துணிந்து செய்ய தயங்குவார்..…

Read More

கோழிப்பண்ணை செல்லத்துரை விமர்சனம்

கதை… ஐஸ்வர்யா தத்தாவின் கணவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் இருவரும் பள்ளியில் படித்து வருகின்றனர். கணவர் ஊரில் இல்லாததால் இவர் வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கிறார்.. இதனை அறிந்து கொண்ட கணவர் இவர்களை தீர்த்து கட்ட முயற்சிக்கிறார்.. எனவே குழந்தைகளையும் கணவனையும் தவிக்க விட்டு கள்ளக்காதனுடன் ஓடி விடுகிறார் ஐஸ்வர்யா தத்தா.. அம்மாவும் ஓடி விட்ட நிலையில் அப்பாவும் இவர்களை துரத்தி விடுகின்ற சூழ்நிலையில் நாயகன் ஏகன் மற்றும் அவரது தங்கை சத்யதேவி இருவரும் இவர்களின் பெரியப்பா யோகி பாபு வளர்ப்பில் வளர்கின்றனர். அதன் பிறகு இவர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்கள் என்ன? தந்தை தாய் இல்லாத இந்த குழந்தைகள் என்னென்ன போராட்டங்களை சந்தித்தனர் என்பதை வலிகளுடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி.. நடிகர்கள்… நாயகன் ஏகன்… முதல்…

Read More