கதை…
புதுக்கோட்டை மாவட்டம் வனங்கான்குடி என்ற பகுதியில் நடக்கும் அரசியலை மையப்படுத்தி இந்த படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் இரா சரவணன்..
போட்டியே இல்லாத ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார் பாலாஜி சக்திவேல்… இவரது வீட்டில் அப்பாவுக்கு பணிவிடை செய்யும் ஒரு வேலையாளாக இருக்கிறார் சசிகுமார்… இவர்களின் பகுதி தலித்துகளுக்கான ரிசர்வ் பகுதியாக மாற்றப்படுகிறது.
இதனை அடுத்து வேறு வழி இன்றி தன் வீட்டில் பணிபுரியும் சசிகுமாரை ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் போட்டியிட வைத்து ஒருமனதாக தேர்ந்தெடுக்கிறார்.
பாலாஜி சக்தி வீட்டில் வேலை செய்த சசிகுமார் ஊராட்சி மன்ற தலைவரான பின்னர் என்ன நடந்தது என்பதுதான் மீதிக்கதை.
நடிகர்கள்..
சசிகுமார் தன்னுடைய முழு உழைப்பை கொடுத்து அம்பேத்குமார் என்ற கேரக்டரை அசத்தலாக வடிவமைத்து இருக்கிறார்.. ஒரு கமர்சியல் ஹீரோ இந்த அளவிற்கு துணிந்து செய்ய தயங்குவார்.. ஆனால் அந்த கேரக்டருக்காகவே தன்னை முழுவதுமாக அர்ப்பணித்திருக்கிறார் சசிகுமார்.. ஒரு காட்சியில் நிர்வாணமாக கூட நடித்திருக்கிறார்..
மிரட்டல் வில்லனாக பாலாஜீ சக்திவேல் நடித்திருக்கிறார்.. அதிகாரம் ஆணவம் உள்ளிட்டவை கொண்ட ஒரு அரசியல்வாதியாக அசத்தல்..
சசிகுமார் மனைவியாக ஸ்ருதி பெரியசாமி தன்னுடைய மிகையில்லாத நடிப்பை கொடுத்திருக்கிறார்.. கட்சி கட்சி என்று ஓடும் ஒவ்வொரு கணவனை எதிர்க்கும் மனைவியாக இவரது கேரக்டர் பிரதிபலிக்கிறது..
சசிக்குமாராவின் மகனாக நடித்தவரும் நல்லதொரு நடிப்பை கொடுத்திருக்கிறார்…
இவர்களுடன் அரசியல்வாதி கூடவே வரும் நபர்களும் கிராமத்து அப்பாவி மனிதர்களும் தங்கள் நடிப்பில் கவர்க்கின்றனர். ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் சமுத்திரக்கனி ஒரு அரசு ஊழியராக நல்லதொரு நடிப்பை கொடுத்திருக்கிறார்..
தொழில் நுட்ப கலைஞர்கள்…
கத்துக்குட்டி, உடன் பிறப்பே போன்ற படங்களை இயக்கியவர் இரா சரவணன்.. சாதியை கொடுமை இன்றளவிலும் ஒவ்வொரு கிராமங்களிலும் நடக்கிறது ஊராட்சி மன்ற தலைவர் அரசியலை ஆக்குவேறு ஆணிவேராக பிரித்து மேய்ந்திருக்கிறார்.
இன்றைய அரசியல் பிரபலங்கள் சீமான் எடப்பாடி உள்ளிட்டவர்களையும்
நிறைய காட்சிகளில் கிண்டல் அடித்திருக்கிறார்.
நிறைய காட்சிகளில் ஆவணப்படம் பார்ப்பது போன்ற ஒரு உணர்வையே படம் தருகிறது.. அதை இயக்குனர் கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம்.
ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு பேரு பலம்.. அது போல ஒளிப்பதிவும் நேர்த்தியாக அமைந்திருக்கிறது.
தன்னுடைய ஒவ்வொரு படைப்புகளிலும் சமூக சார்ந்த கருத்துக்களையே சொல்லி வருகிறார் இயக்குனர் சரவணன் அதற்காகவே அவருக்கு கை கொடுத்து பாராட்டுகளை தெரிவிக்கலாம்.
இந்த 2000 ஆண்டிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறதா என்ற கேள்வி நிச்சயம் வரும்.. அவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக படம் தொடங்குவதற்கு முன்பு இந்த நாட்டில் இன்னும் இது போன்ற அக்கிரமங்கள் நடக்கிறது என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்து படத்தை முடித்து கொடுத்திருக்கிறார்..