செல்வராகவன் – ஜீ வி பிரகாஷ் குமார் கூட்டணியில் உருவாகும்’ மெண்டல் மனதில்’*

இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மெண்டல் மனதில்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரும், இயக்குநருமான தனுஷ் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் ‘மெண்டல் மனதில்’ எனும் திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மாதுரி ஜெயின் நடிக்கிறார். இவர்களுடன் முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பாலாஜி கவனிக்க, கலை இயக்கத்தை ஆர்.கே. விஜய் முருகன் மேற்கொள்கிறார். தினேஷ் குணா எக்சிக்யூட்டிவ் புரொடியுசராக பொறுப்பேற்றிருக்கும் இந்தத் திரைப்படத்தை பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ்…

Read More

வெளியானது சியான் 63 பட அறிவிப்பு!!

எங்கள் மூன்றாவது தயாரிப்பை அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி மற்றும் பெருமை அடைகிறோம். கோடிக்கணக்கான மக்களை தனது நடிப்பின் மூலம் மகிழ்வித்து, மறக்க முடியாத கதாபாத்திரங்களையும் முன்னோடியான படங்களையும் வழங்கிய நடிகர் சியான் விக்ரமுடன் கை கோர்ப்பதில் மிகுந்த பெருமிதம் கொள்கிறோம். இந்த திரைப்படத்தை மண்டேலா மற்றும் மாவீரன் போன்ற சிறந்த படைப்புக்களை உருவாக்கிய மடோன் அஷ்வின் இயக்கவுள்ளார். அவரது தனித்துவமான கதை சொல்லும் திறன் எங்களை மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற தூண்டியுள்ளது. உலகளாவிய பார்வையாளர்களை கவரும் வகையில் உயர்தரமான ஒரு திரைப்படத்தை வழங்கும் உறுதியுடன் நாங்கள் இந்த பயணத்தை தொடங்குகிறோம். நன்றியுடன், அருண் விஸ்வா சாந்தி டாக்கீஸ்

Read More