சினிமா தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் மாற்றங்கள்

இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசாங்கம் சுதந்திர போராட்ட காலத்தில் நாடகம், சினிமா இவற்றுக்கு சட்டத்தை அமுல்படுத்தியது இந்தியா சுதந்திரம் அடைந்தபின் அதில் சில மாற்றங்களை செய்து 1952ம் ஆண்டு சினிமாட்டோகிராப் சட்டத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்தியது அதன் அடிப்படையில் சினிமா தியேட்டர்களில்  திரையிடப்படும் திரைப்படங்களுக்கு மத்திய திரைப்பட தணிக்கைத் துறையிடம் சான்றிதழ் பெற வேண்டும் தணிக்கை குழு படத்தை பார்த்து அவற்றிற்கு U, UA,Aஎன படத்தின் தன்மைக்கு ஏற்ப சான்றிதழ்களை வழங்கி வருகிறது. இப்போது இந்த சான்றிதழ் முறையில் சிறு மாற்றங்களைச் செய்ய மத்தியஅரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது அதற்காக1952ம் ஆண்டு சினிமாட்டோகிராப் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி திரைப்படத் தணிக்கைத் துறையால் நிராகரிக்கப்படும் படங்களை திரைப்படத் தணிக்கை டிரிப்யூனலில் முறையிடும் வாய்ப்பு இருந்தது. ஆனால், தற்போது இந்த டிரிப்யூனல்…

Read More