சினிமாவில் என்னை அரங்கேற்றம் செய்தவர் இப்ராஹிம் – T.ராஜேந்தர் உருக்கம்

இயக்குனர் டி.ராஜேந்தரை,  இயக்குனராக ‘ஒருதலை ராகம்’ படத்தில் அறிமுகம் செய்த, தயாரிப்பாளர் இப்ராஹிம் வயது மூப்பு காரணமாக காலமாகியுள்ளார். இவரது மறைவிற்கு டி.ராஜேந்தர் அறிக்கை மூலம் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.  இயக்குனர் டி.ராஜேந்தர் ‘ஒருதலை ராகம்’ படத்தின் கதையை கையில் வைத்து கொண்டு, தயாரிப்பாளரை தேடி அலையாத இடங்கள் இல்லை. ஏறி இறங்காத தயாரிப்பு கம்பெனிகள் இல்லை.  இவரை நம்பி பணம் போட தயாரிப்பாளர்கள் முன்வராத நிலையில், மயிலாடுதுறை அருகே உள்ள வடகரையில் உள்ள முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த வசதி படைத்தவரான இப்ராஹிம் டி.ராஜேந்தருக்கு அறிமுகமானார். டி.ராஜேந்தர் கூறிய கதை பிடித்து போனதால்,  ‘ஒருதலை ராகம்’ படத்தை தயாரிக்கவும் ஒப்புக்கொண்டார். அதே நேரத்தில் சில நிபந்தனைகளும் டி.ராஜேந்தருக்கு விதிக்கப்பட்டது. கதை, திரைக்கதை, வசனம், இசை போன்ற பணிகளை டி.ராஜேந்தர், செய்தாலும் படத்தை நான்தான் இயக்குவேன் என்றார் இம்ராஹிம்.…

Read More