டாக்டர். ஐசரி கே. கணேஷ் அவர்களால் துவங்கப்பட்ட, தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், அனீஷ் அர்ஜுன் தேவ் அவர்களின் வாமிண்டியா நிறுவனத்துடன் இணைந்து, தயாரிக்கப்பட்ட திரைப்படம் “அகத்தியா”. “ஏஞ்சல்ஸ் வெர்சஸ் டெவில்” என்ற வசீகரிக்கும் கதைக்கருவுடன், அதிநவீன CGI உடன் இதயப்பூர்வமான மனித உணர்வுகளைக் கலந்து, திகில், திரில்லர் பாணியில், அனைவரும் ரசிக்கும் வகையில், ஒரு புதுமையான உலகைப் படைத்திருக்கும் “அகத்தியா” படத்தினை புகழ்பெற்ற பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ளார். மிகப்பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும் தென்னிந்தியப் பிரம்மாண்ட திரைப்படமான “அகத்தியா” திரைப்படத்தின் அற்புதமான டைட்டில் லோகோ வீடியோவை, தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். பிரமிக்க வைக்கும் காட்சியமைப்புகள் மற்றும் முதுகுத்தண்டைச் சில்லிட வைக்கும் இசை என, இப்படத்தின் டைட்டில் லோகோ வீடியோ ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்துள்ளது – நான்கு மொழிகளில்…
Read MoreCategory: Uncategorized
“எனை சுடும் பனி மூலம் நாயகனாக நட்ராஜ் சுந்தர்ராஜ் அறிமுகம்”
எஸ்.என்.எஸ் பிக்சர்ஸ் சார்பில், ஹேமலதா சுந்தர்ராஜ் தயாரிக்கும் “எனை சுடும் பனி” என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் நட்ராஜ் சுந்தர்ராஜ். அவருக்கு ஜோடியாக உபாசனா ஆர்.சி நடிக்கிறார். இவர்களுடன் பாக்யராஜ், சித்ரா லட்சுமணன், மனோபாலா, தலைவாசல் விஜய், சிங்கம்புலி, முத்துக்காளை, சுந்தர்ராஜ், டிஎஸ்ஆர், தனிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். நட்ராஜ் சுந்தர்ராஜ் எல்லோரிடமும் ஜாலியாக பழகும் இளைஞன். அவருடைய லட்சியமே ஐபிஎஸ் அதிகாரியாக ஆவது. எதிர்பாராத விதமாக போலீஸ் விசாரணை வளையத்துக்குள் சிக்குகிறார். அந்த பிரச்சனையில் அவருக்கு ஏற்படும் இன்னல்களை எப்படி சமாளிக்கிறார். காதலியை கரம் பிடித்தாரா. ஐபிஎஸ் அதிகாரியாக ஆனாரா. இல்லை குற்றவாளியாக சிறை பிடிக்கப்பட்டாரா. சைக்கோ, க்ரைம், திரில்லர், சஸ்பென்ஸ், காதல் என்று “என்னை சுடும் பனி” விறுவிறுப்பாக செல்கிறது. பொள்ளாச்சி, ஆனையூர், மறையூர் ஆகிய இடங்களில் பிரம்மாண்டமான செட் அமைத்து…
Read More“பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய தயாரிப்பாளர் சங்கம் 4 வருடங்களாக முடங்கி கிடக்கிறது” – முன்னாள் தலைவர் கே.ஆர். பரபரப்பு அறிக்கை
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவரும் பட அதிபருமான கே.ஆர். வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழ் திரைப்படத்துறை எப்போதும் இல்லாத வகையில் பலமுனை தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. படம் எடுப்பதில் தொடங்கி வியாபாரம், ரிலீஸ், கலெக்ஷன் என்று அத்தனையுமே இன்று சவாலாக மாறிப் போயிருக்கிறது. பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து தீர்வு காண வேண்டிய தயாரிப்பாளர் சங்கம் நான்கு வருடங்களாக முடங்கிப் போய் கிடக்கிறது. நட்சத்திர நடிகர்கள் படங்களைத் தவிர மற்றவர்களுக்கு போஸ்டர் ஒட்டும் காசு கூட கிடைப்பதில்லை. சேட்டிலைட் வியாபாரம் ஓடிடி ஆடியோ ரைட்ஸ் கியூப் கட்டணம் டிக்கெட் புக்கிங் கட்டணம் உள்ளிட்ட எதையுமே முறைப்படுத்த முடியாவிட்டால் எதற்கு சங்கத் தலைவர் பதவி? இத்தனை வருடங்களாக பொறுத்து பொறுத்துப் பார்த்து பொங்கி எழுந்த உறுப்பினர்கள், தலைமைக்கு எதிராக நம்பிக்கையில்லா…
Read More“கார்த்தியின் நடிப்புக்கு கிடைத்த பாராட்டுகள் தான் எனக்கு மிகப் பெருமையாக இருந்தது” ; அர்விந்த்சாமி
2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மெய்யழகன்’ படம் கடந்த செப்-27ஆம் தேதி வெளியானது.. கதாநாயகனாக கார்த்தி, முக்கிய வேடத்தில் அர்விந்த் சாமி நடித்துள்ள இப்படத்தை 96 புகழ் பிரேம்குமார் இயக்கியுள்ளார், கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடிக்க, தேவதர்ஷினி முக்கிய கதாபாத்திரத்தில். நடித்துள்ளார். படம் வெளியான நாளிலிருந்தே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி 15 நாட்கள் ஆகியும் கூட திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. இதையடுத்து ‘மெய்யழகன்’ படக்குழுவினர் இதன் வெற்றி விழாவை நன்றி தெரிவிக்கும் நிகழ்வாக கொண்டாடினார். இந்த நிகழ்வு நேற்று மாலை சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், நடிகர் அர்விந்த்சாமி பேசும்போது, “நான் பணியாற்றிய படங்களிலேயே மறக்க முடியாத படங்களில் இதுவும் ஒன்று. அதற்கு படக்குழுவினருக்கு நன்றி.…
Read Moreலப்பர் பந்து விமர்சனம் 4.5/5.. பறக்கும் பந்து
கதை… தினேஷ் ஜோடி ஸ்வஸ்விகா… ஹரிஷ் கல்யாண் ஜோடி சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி.. தினேஷ் மற்றும் ஹரிஷ் இருவரும் கிரிக்கெட் வெறியர்கள்.. இதில் தினேஷ் (கெத்து) – அவர் விஜயகாந்த் ரசிகர்.. ஹரிஷ் (அன்பு) இவர் விஜய் ரசிகர் 20 வயது ஆகும் முன்பே தன் காதலியை கரம் பிடித்தவர் தினேஷ்.. இவருக்கு 20 வயது மகள் இருக்கும்போது இவருக்கு கிரிக்கெட் வீரன் ஆர்வம் குறையவில்லை இதனால் மனைவியுடன் அடிக்கடி பிரச்சினை வருகிறது.. மேலும் கிரிக்கெட் போட்டியின் போது தினேஷுக்கும் ஹரிஷுக்கும் ஈகோ மோதல் வெடிக்கிறது.. இந்த சூழ்நிலையில் கிரிக்கெட் வீரர் ஹரிசை காதலிக்கிறார் தினேஷ் மகள் சஞ்சனா.. ஏற்கனவே தினேஷின் கிரிக்கெட் ஆர்வத்தால் தன் வாழ்க்கையை தொலைத்து நிற்கும் ஸ்வஸ்விகா மகளின் காதலை எதிர்க்கிறார்.. இதன் பிறகு என்ன நடந்தது.? கிரிக்கெட் மருமகனை ஸ்வஸ்விகா தினேஷ் ஏற்றுக்…
Read Moreதிருநெறிய செந்தமிழ் ஆகம திருக்குட முழக்கு நன்னீராட்டுப் பெருவிழாவில் இயக்குனர் திரு. கே. பாக்யராஜ்
நேற்று, கோவை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு பெரியநாயகி உடனுறை கங்கை கொண்ட சோழீஸ்வரர் திருநெறிய செந்தமிழ் ஆகம திருக்குட முழக்கு நன்னீராட்டுப் பெருவிழாவில் இயக்குனர் திரு. கே. பாக்யராஜ் அவர்களுடன் இணைந்து கலந்து கொண்டு இறைவனின் அருளினை பெற்றதில் எண்ணற்ற மகிழ்ச்சி. பின்னர் அன்னதான நிகழ்வை துவைக்கி வைத்து வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினோம். இந்த திருக்கோவிலினை மிகச் சிறப்பாக நிறுவிய கவிஞர், நடிகர் மற்றும் இயக்குனர் திரு. பா. விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டேன்.
Read Moreராஜூ முருகன் வசனத்தில் நடிக்கும் கௌதம் கார்த்திக்!
இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கடல்’ படத்தின் மூலம் நமக்கு கதாநாயகனாக அறிமுகமான கௌதம் கார்த்திக், தொடர்ந்து தமிழில் பல வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘பத்து தல’ மற்றும் ‘ஆகஸ்ட் 16, 1947’ ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றது. தற்போது கௌதம் கார்த்திக் ‘கிரிமினல்’ மற்றும் ‘மிஸ்டர் எக்ஸ்’ என இரண்டு படங்களில் நடித்து வரும் நிலையில், இப்போது இவர் நடிக்கும் புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கௌதம் கார்த்திக்கின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் இப்புதிய படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். எளிய மக்களின் வாழ்வியலையும் அதிகாரத்திற்கு எதிரான அரசியலையும் அழுத்தமாக பதிவு செய்யும் இயக்குநர் ராஜு முருகன் இப்படத்திற்கு வசனம் எழுதுகிறார். இவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தினா ராகவன்…
Read Moreரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள ‘மார்டின்’ திரைப்படம்- பத்திரிக்கையாளர் சந்திப்பு !!
Vasavi Enterprises சார்பில் தயாரிப்பாளர்கள் உதய் K மேத்தா, சுராஜ் உதய் மேத்தா தயாரிப்பில், ஆக்சன் கிங் அர்ஜூன் கதையில், இயக்குநர் AP அர்ஜூன் இயக்கத்தில், ஆக்சன் மெகா ஸ்டார் துருவா சர்ஜா நடிப்பில், பிரமாண்டமான பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் மார்டின். வரும் அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழுவினர் இந்தியா முழுவதும் பிரம்மாண்டமாக, இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சிகளைத் துவங்கியுள்ளனர். இதன் முதல் கட்டமாகப் படக்குழுவினர், தமிழ்ப் பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில், சென்னையில் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இவ்விழாவினில், தயாரிப்பாளர் உதய் K மேத்தா, ஆக்சன் கிங் அர்ஜூன், நாயகன் துருவா சர்ஜா, நாயகி வைபவி உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வினில் … தயாரிப்பாளர் உதய் K மேத்தா பேசியதாவது… பிரத்தியேகமாகப் பாடல்களை முதன்…
Read Moreமெகாஸ்டார் சிரஞ்சீவி, வசிஷ்டா, யுவி கிரியேஷன்ஸ் இணையும் விஸ்வம்பரா படத்தின் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது !!
ப்ரீ-லுக் போஸ்டர் பெரும் வரவேற்பைக் குவித்த நிலையில், மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் கிரேஸி சோஷியோ-ஃபேண்டஸி என்டர்டெய்னர் “விஸ்வம்பரா” படத்தின் தயாரிப்பாளர்கள், ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில், பர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளனர். ஃபர்ஸ்ட் லுக்கில் மாய புராணகதைகளை ஞாபகப்படுத்தும் பின்னணியில், சிறப்பு சக்திகள் மிகுந்த திரிசூலத்தினை ஏந்தியபடி காட்சியளிக்கிறார் சிரஞ்சீவி. இடி மின்னல் பரவ, தெய்வீக கதிரலை சுற்றிலும் பாய்கிறது. சிரஞ்சீவி மிக இளமையாகவும் சுறுசுறுப்பாகவும் லேசான தாடியுடன் தோற்றமளிக்கிறார், திரிசூலத்தினை கையில் பிடித்தபடி, மிரட்டலான லுக்கில் அசத்துகிறார். இந்த கண்கவர் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. பிளாக்பஸ்டர் “பிம்பிசாரா” திரைப்படத்தை வழங்கிய இயக்குநர் வசிஷ்டா, தனது அபிமான நட்சத்திரமான சிரஞ்சீவியுடன் இணைந்து, “விஸ்வம்பரா” திரைப்படத்தை பிரம்மாண்ட படைப்பாக உருவாக்குகிறார். சிறந்த விஎஃப்எக்ஸ், அதிரடி ஆக்சன் காட்சிகள் மற்றும் மனதைத்…
Read More‘மட்கா’ படத்தின் வருண் தேஜின் புதிய போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர்!!
மெகா பிரின்ஸ் வருண் தேஜ், “மட்கா” படம் மூலம், பான் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளார். இப்படம், அவரது திரைவாழ்வின், மிகப் பெரும் பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படமாகும். கருணா குமார் இயக்கத்தில் வைரா என்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் எஸ்ஆர்டி என்டர்டெயின்மென்ட்ஸ் பேனர்களில் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா மற்றும் ரஜனி தல்லூரி தயாரிக்கும் இப்படம், மிகப் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. தற்போது ஹைதராபாத்தில் இப்படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், வருண் தேஜ் இளைஞன் மற்றும் நடுத்தர வயது மனிதன் என இரண்டு அவதாரங்களில் தோற்றமளிக்கிறார். கதாநாயகனின் 24 வருட பயணத்தை காணும் இத்திரைப்படத்தில், நான்கு விதமான கெட்-அப்களில் வருண் தேஜ் தோன்றுகிறார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், அடிதட்டு மனிதனாக இருந்து கிங்காக மாறியுள்ள அவரின் இரண்டு…
Read More