உள்நாட்டு போட்டிகளின் காரணமாக சீனாவில் ஆன்லைன் வணிகத்தை அமேசான் நிறுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வணிக நிறுவனமான அமேசானுக்கு போட்டியாக சீனாவில் உள்நாட்டு நிறுவனங்களான அலிபாபா, ஜே.டி.காம் உள்ளிட்டவை வேகமாக வளர்ந்து வருகின்றன. வர்த்தக ரீதியான போட்டிகள் காரணமாகவும, கடுமையான விதிமுறைகள் காரணமாகவும் 15 வருடங்களாக அந்நாட்டில் ஆன்லைன் வணிகம் செய்து வரும் அமேசான், அதனை வரும் ஜூன் மாதம் 18ம் தேதியோடு நிறுத்திக்கொள்ள இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனவே அன்று முதல் சீனாவில் உள்ளவர்கள் வெளிநாட்டில் செய்யப்பட்ட பொருட்களை மட்டுமே அமேசான் மூலம் வாங்க முடியும். மேலும் அமேசானின் வெப் சேவைகள், கிண்டில் இ-புத்தகங்கள் மற்றும் கிராஸ்-பார்டர் (cross-border) செயல்பாடுகளை சீனாவில் தொடரவும் அமேசான் முடிவு செய்துள்ளது.
Read MoreCategory: உலக செய்திகள்
இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்பு!
கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட மனித உயிர்களைக் குடித்த, இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இலங்கையில் கடந்த ஈஸ்ட்ர் தினமான ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு இதுவரை 45 குழந்தைகள் உள்பட 321 பேர் பலியாகி உள்ளனர். அதிலும் 35 வெளிநாட்டவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர், படுகாயங்களுடன் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தோருக்காக அந்நாட்டு மக்கள் செவ்வாய் கிழமை அன்று 3 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர். தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவசர நிலை பிரகடனம் மற்றும் ஊரடங்கு உத்தரவால், இலங்கையில் சாலைகள் வெறிச்சோடின. தாக்குதல் தொடர்பாக தற்போது வரை 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதல் குறித்த விசாரணைக்கு உதவுவதற்காக இண்டர்போலின் ஒரு குழுவும் இலங்கை சென்றுள்ளது.இதனிடையே கட்டுவப்பிட்டியா…
Read More