உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றிபெற்றுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் மீது எப்போதுமே அதிக எதிர்பார்ப்பு இருக்கும். அதுவும் உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணியை பாகிஸ்தான் இதுவரை வென்றதே இல்லை என்பதால் இந்த ஆண்டு உலகக் கோப்பை தொடரிலும் இந்திய அணி மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. லீக் சுற்றின் 22ஆவது ஆட்டத்தில் நேற்று (ஜூன் 16) பாகிஸ்தானை எதிர்த்து இந்தியா விளையாடியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. ஷிகர் தவனுக்குப் பதிலாகத் தொடக்க வீரராகக் களமிறக்கப்பட்ட லோகேஷ் ராகுல், ரோஹித் ஷர்மாவுக்கு பக்கபலமாக நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த ரோஹித் ஷர்மா அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தார். 34 பந்துகளில் அரைசதம் கடந்த ரோஹித் ஷர்மா ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில்…
Read MoreMonth: June 2019
மூன்றரை ஆண்டுகளில் 17 லட்சம் பேர் மீது ஹெல்மெட் போடாத வழக்குகள் பதிவு!
சென்னையில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டியதாக கடந்த மூன்றரை ஆண்டுகளில் 17.12 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு சராசரியாக 4,691 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. சுமார் ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட சென்னையில் 60 லட்சம் வாகனங்கள் உள்ளன. இதில் 46 லட்சம் இருசக்கர வாகனங்களாகும். கடந்த 15 ஆண்டுகளில் சென்னையில் வாகனப் பெருக்கம் 300 சதவீதம் உயர்ந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டிலேயே இரு சக்கர வாகனங்கள் அதிகம் உள்ள நகரங்களில் தில்லி முதலிடத்திலும், பெங்களூரு இரண்டாமிடத்திலும், சென்னை மூன்றாமிடத்திலும் உள்ளன.சென்னையில் இப்போது இருவருக்கு ஒன்று என்ற விகிதத்தில் இரு சக்கர வாகனங்களின் பெருக்கம் உள்ளது. புதிதாக வாகனங்கள் வாங்குவோரின் எண்ணிக்கை சென்னையில் ஆண்டுக்கு சராசரியாக 3 சதவீதத்தில் இருந்து 6 சதவீதம் வரை…
Read Moreஅரசுப்பள்ளியின் தலையெழுத்தை மாற்றும் ஜோதிகா! இம்மாதம் “ராட்சசி”.
ஜோதிகா நடித்து, ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் சை.கௌதம்ராஜ் இயக்கத்தில் அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் “ராட்சசி”. ஹீரோயின்களுக்கு முக்கியத்துவத்துடன் நல்ல கதைகளாகவும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஜோதிகா. “நல்ல விமர்சனமும் கமர்சியல் ரீதியிலான வெற்றியும்” என்ற பார்முலாவில் வெற்றிகரமாக பயணித்து வருகிறார். அவரின் அடுத்த படமான ராட்சசி படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. விரைவில் படம் திரைக்கும் வர இருக்கும் நிலையில் அதனை இயக்கியுள்ள இயக்குநர் சை.கௌதம்ராஜ் அவர்களிடம் படத்தைப் பற்றிக் கேட்ட போது, ஒவ்வொரு பையனோட முதல் ஹீரோயினும் ஒரு டீச்சராத் தான் இருப்பாங்க.. எனக்கு என்னோட நாலாங்கிளாஸ் “நிர்மலா டீச்சர்”, ஒவ்வொருத்தருக்கும் இப்படி ஒரு டீச்சரோ பேர் கட்டாயம் மனசில இருக்கும். நம்மளோட அந்த டீச்சர் பள்ளிக்கூடத்துல நடக்குற நடக்க வேண்டிய…
Read Moreவிஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குனர் விருமாண்டி எழுதி – இயக்கும், ‘க/பெ ரணசிங்கம்’ !
கே ஜே ஆர் ஸ்டுடியோஸ்’ கே ஜே ராஜேஷ் தயாரிப்பில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குனர் விருமாண்டி எழுதி – இயக்கும், ‘க/பெ ரணசிங்கம்’ . இத்திரைப்படத்தில், ரணசிங்கமாக விஜய் சேதுபதி நடிக்க, அவருக்கு ஜோடியாக அரியநாச்சியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். திரைப்பட விநியோகஸ்தராக இருந்து தயாரிப்பாளராக உயர்ந்து, கே ஜேஆர் ஸ்டுடியோஸ்’ சார்பில், நயன்தாரா நடித்த ‘அறம், ஐரா’, மற்றும் பிரபு தேவா நடித்த ‘குலேபகாவலி’ ஆகிய வெற்றி படங்களை தயாரித்தவரும், அஜித்தின் ‘விசுவாசம்’ திரைப்படத்தை தமிழகத்தில் விநியோகிஸ் தவருமான கே ஜே ராஜேஷ், தற்போது சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் ‘ஹீரோ’ படத்தை தயாரித்து வரும் நிலையில், தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பாக ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘க/பெ ரணசிங்கம்’ திரைப்படத்தை தயாரிக்கிறார்.…
Read Moreசிந்துபாத் கதை என்ன தெரியுமா? – விஜய்சேதுபதி ஓப்பன் டாக்!
விஜய் சேதுபதி, அஞ்சலி, சூர்யா விஜய் சேதுபதி, விவேக்பிரசன்னா, லிங்கா உள்ளிட்ட பலர் நடிப்பில், கே புரொடக்ஷன்ஸ் கே.ராஜராஜன், வான்சன் மூவீஸ் சான் சுதர்சன் ஆகியோரது தயாரிப்பில் , S.U.அருண்குமார் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பில் தயாரான ‘சிந்துபாத்’ படத்தின் ஆடியோ வெளியீடு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இவ்விழாவில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் கே.ராஜராஜன், தயாரிப்பாளர் ஷான் சுதர்சன், படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் கிளாப் போர்டு சத்தியமூர்த்தி, விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் செல்வின் ராஜ், விநியோகஸ்தர்கள் சங்க செயலாளர் ராஜமன்னார், விநியோகஸ்தர்கள் சங்க பொருளாளர் மணிகண்டன், பைனான்சியர் மோகன் குமார், கலை இயக்குனர் மூர்த்தி, படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, படத்தின் இயக்குனர் அருண்குமார், மியூசிக் 7 நிறுவன பிரதிநிதி நவீன் உள்ளிட்ட பலர் கலந்து…
Read Moreகாணாமல் போன ஏஎன் 32 ரக விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது!.
விமானப்படையின் ஏஎன் 32 ரக விமானத்தின் பாகங்கள், மாயமான 8 நாட்களுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலம், ஜோர்கத்தில் இருந்து அருணாச்சல பிரதேசத்தின் மென்சுகா பகுதிக்கு இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என். 32 ரக சரக்கு விமானம் கடந்த 3ம் தேதி புறப்பட்டு சென்றது. ரஷ்யா தயாரிப்பு விமானமான இது தற்போது இந்திய விமான படையில் மிக குைறந்த எண்ணிக்கையிலேயே பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், கடந்த 3ம் தேதி விமான ஊழியர்கள் 8 பேர், ராணுவத்தை சேர்ந்த 5 பேருடன் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, அதன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அது விபத்தில் சிக்கியதாக கருதி, தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இந்த தேடுதல் பணியில் விமானப்படைக்கு சொந்தமான சுகோய் -30 உள்ளிட்ட போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், இந்தோ – திபெத் எல்லை படை மற்றும் உள்ளூர் போலீசார்,…
Read Moreராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் தனது இசை குழுவினருக்காக ‘நன்றி தெரிவிப்பு’ வீடியோ ரிலீஸ்!
‘மகரிஷி’ திரைப்படத்தின் வரலாற்று வெற்றியை தொடர்ந்து, ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் தனது இசை குழுவினருக்காக ஒரு ‘நன்றி தெரிவிப்பு’ வீடியோ வெளியிடுகிறார். டிஎஸ்பி, தேவி ஸ்ரீ பிரசாத், இன்றைய இளைய தலைமுறையின் இசையமைப்பாளர். பல்வேறு வெற்றி படங்களுக்கு இசையமைத்த பெருமைக்குரியவர். அவரது ஆட வைக்கும் இசைக்காகவே ‘ராக்ஸ்டார்’ என புகழ் பெற்றவர். இந்த வருடத்தின் மாபெரும் வெற்றித் திரைப்படமான ‘மகரிஷி’ படத்திற்கான பங்களிப்பின் மூலம், மீண்டும் இசைத்துறையின் பேசுபொருளாக மாறி, அனைவரின் கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்திருக்கிறார். ‘மகரிஷி’ திரையரங்குகளில் இன்றுடன் தனது வெற்றிகரமான 30வது நாளை நிறைவு செய்கிறது. இத்திரைப்படம் சூப்பர் ஸ்டார் மகேஷின் திரையுலக பயணத்தின் ஒரு முக்கியமான மைல்கல் என்பதோடு அவரது ‘வெள்ளி விழா’ படமும் கூட. இப்படம் ‘மகரிஷி’ மகேஷின் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய வரமாக அமைந்ததோடு மட்டுமின்றி, அவர்கள் இப்படத்தை…
Read Moreஜீவி படத்துக்கு தணிக்கை குழுவில் ‘U’ சான்றிதழ்!
‘மைண்ட் கேம்ஸ்’ அடிப்படையிலான த்ரில்லர் படங்கள் எப்போதுமே அனைத்து தரப்பு ரசிகர்களையும் எந்த ஒரு தடையும் இன்றி கவர்ந்திருக்கிறது. அத்தகைய திரைப் படங்களுக்கு எப்போதுமே சிவப்பு கம்பள வரவேற்பு உண்டு. குறிப்பாக, பார்வையாளர்கள் தங்களை படத்தோடு ஒன்ற வைக்கும் கதை சொல்லலையும், சில நேரங்களில் சீட்டின் நுனிக்கு வர வைக்கும் படங்களையும் எதிர்பார்க்கிறார்கள். சமீபத்தில் “ஜீவி” படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர் அத்தகைய தாக்கத்தை உருவாக்கியது. அதன் ஒவ்வொரு கூறுகளும் இது எப்படிப்பட்ட ஒரு படம் என்பதை அறியும் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. மிகச்சிறந்த குழுவின் உழைப்பால், மொத்த படமும் குறித்த நேரத்தில் முடிவடைந்திருக்கிறது. தற்போது, படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள், படத்துக்கு ‘U’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். இயக்குனர் வி.ஜே.கோபிநாத் இது குறித்து கூறும்போது, “ஒரு அறிமுக இயக்குனரான எனக்கு இது ஒரு மகிழ்ச்சியான தருணம். குறிப்பாக,…
Read Moreசுட்டுப்பிடிக்க உத்தரவு-இம்மாதம் 14 ஆம் தேதி வெளிவரும்!
“சுட்டு பிடிக்க உத்தரவு” படத்தின் டிரெய்லர் மற்றும் காட்சி விளம்பரங்கள் ரசிகர்களிடையே படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. கூடுதலாக, படத்தின் தலைப்பு இது நிக் ஆஃப் டைம் த்ரில்லர் வகையை அடிப்படையாக கொண்டது என்பதை குறிக்கிறது. இந்த படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் மிஷ்கின் மற்றும் சுசீந்திரன் ஆகியோருடன் விக்ராந்த் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். ஜூன் 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாகவே உள்ளன. இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா, முன்னணி இயக்குனர்களான மிஷ்கின் மற்றும் சுசீந்திரன் ஆகியோரை இந்த படத்தில் ஏன் நடிக்க வைத்தார் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இது குறித்து ராம்பிரகாஷ் ராயப்பா கூறும்போது, “அவர்கள் வெறும் இயக்குனர்கள் என்பதையும் தாண்டி, தமிழ் சினிமாவில் எல்லாவற்றையும் அறிந்த மேதைகள். படப்பிடிப்பில் பல…
Read Moreநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன்
பார்வையாளர்களுக்கு மிக நெருக்கமாக இருக்கும் நடிகரை பற்றி புகழ்ந்து சொல்ல அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு சொற்றொடர் தான் ‘Boy Next Door”. அவர்கள் மக்கள் மத்தியில் ஒருவராக அடையாளம் காணப்படும் ஒரு மந்திரத்தை கொண்டிருப்பர், ஆனால் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படக்குழுவில் உள்ள அத்தனை பேருமே “நம்ம வீட்டு பசங்க” என்ற அடைமொழிக்கு ஏற்றவர்களாக கருதப்படுகிறார்கள். அவர்கள் சின்னத்திரை மற்றும் Youtube என இரண்டிலும் தங்களது பகுத்தறிவுடன் கூடிய நகைச்சுவையால் பிரபலமானவர்கள். உண்மையில், இது தான் படத்திற்கு மிகப்பெரிய எனர்ஜியை மக்களிடையே உருவாக்குகிறது. சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படம் வரும் ஜூன் 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் ரசிகர்கள் படத்தை எப்படி வரவேற்பார்கள் என்பதை அறிய மிகவும் ஆர்வமாக உள்ளார். இந்த படத்தின் மூலம் அறிமுகமாகும் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன்…
Read More