‘C / O காதல்’ சினிமா விமர்சனம்

‘C / O காதல்’ சினிமா விமர்சனம். ‘அந்தாலஜி’ பாணியில் கதைகளை உருவாக்கி, ‘அடடே’ கிளைமாக்ஸில் முடித்திருக்கும் படம்! அந்த சிறுவனுக்கு அந்த சிறுமி மீது மெல்லிய பிரியம் அரும்பி காதலாகிறது. சிறுமியின் அப்பா அவளை டெல்லிக்கு படிக்க அனுப்பிவிட, சிறுவனுக்கு காதல் தோல்வி! அந்த பிராமணப் பெண்ணுக்கு, அடியாளாய், ரவுடியாய் ஊர் சுற்றும் அந்த கிறிஸ்தவ இளைஞன் மீது காதல் உருவாகிறது. பெண்ணின் அப்பா மதத்தை காரணம்காட்டி அவளுக்கு வெறொரு மணமகனுடன் கல்யாணம் செய்து வைக்க, அவனுக்கும் காதல் தோல்வி! மதுக்கடையில் வேலை செய்யும் அந்த இளைஞனுக்கு அந்த இஸ்லாமியப் பெண்மீது காதல். பின்னாளில் அவள் விலைமாது என்கிற அதிர்ச்சிக்கு ஆளாகிறான். காதலின் ஆழம் அவர்களை கல்யாணம் நோக்கி நகர்ந்த திடீரென அவள் உலகத்தை விட்டுப் போகிறாள்! கல்யாணம் கை கூடாததால், ஊராரின் கேலிக்கும் கிண்டலுக்கும்…

Read More

தயாரிப்பாளர் எம்.எஸ்.முருகராஜ் மகள் திருமண வரவேற்பு – பிரபலங்கள் நேரில் வாழ்த்து*

*தயாரிப்பாளர் எம்.எஸ்.முருகராஜ் மகள் திருமண வரவேற்பு – பிரபலங்கள் நேரில் வாழ்த்து* யா யா மற்றும் பக்ரீத் படங்களை தயாரித்தவர் எம்.எஸ். முருகராஜ். இவரின் மகள் டாக்டர் லாவண்யா முருகராஜ், டாக்டர் ரூபன் எழுமலை அவர்களின் திருமண வரவேற்பு செங்கல்பட்டில் சிறப்பாக நடைபெற்றது. இதில் இயக்குனர் ஹரி அவரது மனைவி ப்ரிதா, நடிகர்கள் பொன்வண்ணன், ரவி மரியா, ஜெரால்ட், தயாரிப்பாளர்கள் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, ரெட் ஜெயன்ட் மூவீஸ் செண்பகமூர்த்தி, மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நந்த கோபால், பூச்சி முருகன், திருப்பதி பிரதர்ஸ் சுபாஷ் சந்திரபோஸ், தங்கராஜ், வின்னர் ராமசந்திரன், கலை இயக்குனர் கதிர் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

Read More

பாலுமகேந்திரா நூலகம் நடத்தும் – ஆவணப்பட பயிற்சிப்பட்டறை

பாலுமகேந்திரா நூலகம் நடத்தும் – ஆவணப்பட பயிற்சிப்பட்டறை.     -இயக்குனர் ஆசான் பாலு மகேந்திரா அவர்கலளின் 7வது நினைவு நாளை முன்னிட்டு பாலுமகேந்திரா நூலகம் நடத்தும் – ஆவணப்பட பயிற்சிப்பட்டறை , பிப்ரவரி 13,14&15 இன்று திரைப்படம் ஓடிடி வருகைக்குபின் பல்வேறு பரிணாமங்களை விரித்துக்கொண்டு வளர்ந்து வருகிறது .வெப் சீரீஸ் வருகைக்குப் பின் கதைப்படங்களைத்தாண்டி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம் ஆகியவற்றின் ரசிகர்களும் அதிகரிக்கத்துவங்கியிருக்கின்றனர். இந்த மாற்றங்களின் எதிரொலியாக தமிழகத்திலும் பலரும் ஆவணப்படங்களை கற்கவும் எடுக்கவும் ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.. இச்சூழலில் தான் ஆவணப்படங்களை எடுக்கும் முறை குறித்து பயிற்சிப்பட்டறை ஒன்றை பாலுமகேந்திரா நூலகம் ஒருங்கிணைக்க முடிவு செய்துள்ளது வரும் பிப்ரவரி 13 பாலுமகேந்திரா அவர்களின் 7 வது நினைவு நாளை முன்னிட்டு பிப்ரவரி 13,14 &15 ஆகிய 3 நாட்களில் ஆவணப்பட பயிற்சிப் பட்டறை ஒன்றை…

Read More

ஒரே குடும்பத்திலிருந்து, இணைந்து நடிக்கும் மூன்று தலைமுறை நடிகர்கள் !

ஒரே குடும்பத்திலிருந்து, இணைந்து நடிக்கும் மூன்று தலைமுறை நடிகர்கள் .   ஒரே குடும்பத்திலிருந்து மூன்று தலைமுறையை சேர்ந்த நடிகர்கள் இணைந்து நடிப்பதென்பது நம் இந்திய திரைஉலகிலேயே அரிதான நிகழ்வாகும். தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமார், அவரது மகன் அருண் விஜய் மற்றும் அவரது பேரன் ஆர்ணவ் விஜய் ஆகிய மூவரும் இணைந்து பிரபல நடிகர் சூர்யாவின் 2D Entertainment தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார்கள். இது குறித்து படத்தின் இயக்குநர் சரவ் சண்முகம் கூறியதாவது… மிக சமீபத்தில் தான் அருண் விஜய் அவர்கள் ஆர்ணவ் விஜய்க்கு தந்தையாக நடிப்பது குறித்து பெருமையாக பகிர்ந்திருந்தேன் இப்போது இதை சொன்னால் மிகவும் வழக்கமான ஒரு செய்தியாகிவிடக்கூடும். ஆனால் தமிழ் சினிமாவில் பல சாதானைகள் படைத்திருக்கும் மூத்த நடிகர் விஜய குமார் அவர்கள் எங்கள் படத்தில் இணைந்திருப்பது மிகவும் பெருமையாக…

Read More

ஒளிப்பதிவாளர், இயக்குநர் KV குகனின் WWW ( Who, Where,Why) பன்மொழி படத்தின் டீஸரை வெளியிட்டார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி !

ஒளிப்பதிவாளர், இயக்குநர் KV குகனின் WWW ( Who, Where,Why) பன்மொழி படத்தின் டீஸரை வெளியிட்டார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி . பிரபல ஒளிப்பதிவாளர், இயக்குநர் KV குகனின் இயக்கத்தில், ஆதித் அருண், ஷிவானி ராஜசேகர் நடிக்கும் பன்மொழி திரில்லர் திரைப்படமான WWW ( Who, Where,Why) படத்தின், டீஸரை வெளியிட்டுள்ளார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இது குறித்து ஒளிப்பதிவாளர், இயக்குநர் KV குகன் கூறியதாவது… எங்கள் படமான WWW ( Who, Where,Why) படத்தின் டீஸரை, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டது எங்கள் அனைவருக்குமே பெருமை. படத்தின் டீஸர் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. படம் குறித்து நிறைய விசயங்களை ஆவலுடன் கேட்டறிந்தார். படத்தில் நடித்துள்ள மூத்த நடிகர்களான டாக்டர் ராஜேசேகர், ஜீவிதா தம்பதியின் மகள், ஷிவானி ராஜசேகருடைய நடிப்பையும், அவரது திரைப்பயணம்…

Read More

ZEE5 ஒரிஜினல் – ராதாமோகன் இயக்கத்தில் வைபவ் – வாணி போஜன் நடிக்கும் புதிய படம்!

ZEE5 ஒரிஜினல் – ராதாமோகன் இயக்கத்தில் வைபவ் – வாணி போஜன் நடிக்கும் புதிய படம். 2020 ஆம் ஆண்டில், ZEE5 ‘லாக்கப்’ ‘க / பெ ரணசிங்கம்’, ‘முகிலன்’ உள்ளிட்ட தனித்துவமிக்க, தரமான படைப்புகளை ரசிகர்களுக்கு அளித்து மகிழ்வித்தது. இந்த 2021ம் வருடத்தில் ZEE5 மேலும் பல சுவாரஸ்யம் மிகுந்த படைப்புகளை தொடர்ந்து வழங்க இருக்கிறது. ZEE5 இந்த வருடத்தின் அடுத்த படைப்பாக, வைபவ் – வாணி போஜன் நடிக்கும் இந்த முழு நீள நகைச்சுவை திரைப்படத்தை வழங்குகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தைப் பிரபல இயக்குநர் ராதாமோகன் இயக்குகிறார். மங்கி மேன் கம்பெனி இப்படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், மயில்சாமி உள்ளிட்ட நடிகர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி படத்தொகுப்பு – கே.எல்.பிரவீன் இசை – பிரேம்ஜி கலை –…

Read More

பிப்ரவரி 5 ல் வெளியாகும் அசோக் செல்வனின் “தீனி” பட ட்ரெய்லர் !

பிப்ரவரி 5 ல் வெளியாகும் அசோக் செல்வனின் “தீனி” பட ட்ரெய்லர் அசோக் செல்வன், நித்யா மேனன், ரிது வர்மா நடிக்கும் “தீனி” படத்தின் ட்ரெய்லர் பிப்ரவரி 5 அன்று வெளியாகிறது. இயக்குநர் அனி I.V. சசி இயக்கும் இப்படத்தினை பாபிநீடு B வழங்குகிறார். தென்னிந்தியாவின் புகழ்மிகு நிறுவனங்களான Sri Venkateswara Cine Chitra LLP மற்றும் Zee Studios இப்படத்தினை தயாரிக்கின்றன. படத்தை தயாரிக்கும் BVSN பிரசாத் படம் பற்றி கூறியதாவது… இது முழுக்க உணர்வுபூர்வமான காதல் கொண்ட, முழுக்க முழுக்க காமெடி நிறைந்த அட்டகாசமான பொழுதுபோக்கு திரைப்படம் ஆகும். அசோக் செல்வன், நித்யா மேனன், ரிது வர்மா நடித்திருக்கும் காட்சிகள் ரசிகர்கள் அனைவரையும் வசீகரிக்கும். மிக சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டோம். தற்போது வரும் பிப்ரவரி 5 அன்று காலை 11 மணிக்கு…

Read More

*5 மொழிகளில் 5 பிரபலங்கள் வெளியிட்ட மாநாடு டீசர்*

  இளைஞர்களை ஈர்த்து வைத்திருக்கும் நாயகன் சிலம்பரசன் TR நடித்து வரும் படம் “மாநாடு”.. சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரித்துவரும் இந்தப்படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். அரசியல் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப்படத்தில் அப்துல் காலிக் என்கிற இஸ்லாமிய இளைஞன் கதாபாத்திரத்தில் சிலம்பரசன் TR நடித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு, இந்தப்படத்தில் வித்தியாச தோற்றங்களில் சிலம்பரசனின் கதாபாத்திர போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் வியப்பை ஏற்படுத்தின. இந்தநிலையில் சிலம்பரசனின் பிறந்தநாளான இன்று பிற்பகல் 2.34 மணியளவில் ஒரே நேரத்தில் ஐந்து மொழிகளில் இந்தப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.. மாநாடு படத்தின் டீசரை தமிழில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், இந்தியில் இயக்குநர் அனுராக் காஷ்யப், மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ், தெலுங்கில் நடிகர் ரவிதேஜா மற்றும் கன்னடத்தில் நடிகர் கிச்சா சுதீப் ஆகியோர் வெளியிட்டு படத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்..…

Read More

கதையை விட ஹீரோ பெரிய ஆளாக இருக்க கூடாது” ; விஷமக்காரன் விழாவில் இயக்குனர் ஓபன் டாக்*

ஹனி பிரேம் ஒர்க்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் விஷமக்காரன். இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளதுடன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக நடிகர் வி (விஜய்). அனிகா விக்ரமன் மற்றும் ‘யாரடி நீ மோகினி’ சீரியல் புகழ் சைத்ரா ரெட்டி கதாநாயகியாக நடித்துள்ளனர். மனித வாழ்க்கையில் மனிதர்கள் ஒருவரை ஒருவர் கையாளுதல் என்பது அவர்களது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கூட உருவாக்கும். அந்தவகையில் இந்தப்படத்தின் கதையே மனிதர்களை தங்களுக்கு ஏற்றபடி திறமையாக கையாளுதல் என்கிற மையக்கருவை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது விரைவில் தியேட்டர்களில் வெளியாக இருக்கும் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.. படக்குழுவினர் அனைவரும் இந்த விழாவில் கலந்துகொண்டனர். பியார் பிரேமா காதல் இயக்குனர் இலன், ‘பைனலி’ பாரத் மற்றும் நீலு ஆகியோர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். படத்தொகுப்பாளர் மணிக்குமரன்…

Read More

மறைந்த நடிகை வி.ஜே சித்ராவின் ட்ரெய்லர் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது!!

மறைந்த நடிகை வி.ஜே சித்ராவின் ட்ரெய்லர் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது! சின்னத்திரை மூலம் தமிழ் மக்களின் உள்ளங்களில் அறிமுகமாகி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் வி.ஜே சித்ரா. அவர் திடீரென இறந்தது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.சினிமா துறையில் சாதிக்க நினைக்கும் பல பெண்களுக்கு எடுத்து காட்டாக விளங்கிய அவரின் மரணம் பலபேருக்கு வருத்தம் அளித்து இந்நிலையில் அவர் இறப்பிற்கு முன் நடித்த படம் கால்ஸ் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது…வெளிவந்த இரண்டு நாட்களில் இந்த ட்ரெய்லர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. திரு.ஜெ.சபரிஷ் இப்படத்தை இயக்கியுள்ளார்.. இப்படம் விரைவில் திரைக்கு வர தயாராகவுள்ளது.

Read More