வசந்த் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் இந்திரா

  ஜெ.எஸ்.எம். பிக்சர்ஸ் மற்றும் எம்பரர் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வசந்த் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படத்திற்கு இந்திரா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஜெ.எஸ்.எம். பிக்சர்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் மற்றும் எம்பரர் என்டர்டெயின்மென்ட் சார்பில் இர்ஃபான் மாலிக்கும் இணைந்து தயாரித்து வசந்த ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்திற்கு “இந்திரா” என்று பெயரிட்டுள்ளனர். நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா, மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகி பெரும் வரவேற்பை பெற்ற நவரசா போன்ற படங்களில் பணியாற்றிய சபரீஷ் நந்தா, தற்போது  இயக்குனராக அறிமுகமாகிறார். வசந்த் ரவி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக மெஹ்ரின் பிரசன்டா நடிக்கிறார். மேலும் இவர்களுடன் அனிகா சுரேந்திரன், சுனில், கல்யாண் மாஸ்டர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். தற்போது இப்படத்திற்கு இந்திரா என தலைப்பு வைக்கப்பட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர்…

Read More

மற்றுமொரு எளிமையான யதார்த்த கதையில் நாயகனாக “மணிகண்டன்”

மக்களின் வாழ்வியலை பிரதிபலிப்பதே எதார்த்த சினிமாவாகும். அத்தகைய எதார்த்த சினிமாவில், தன் ஒவ்வொரு நாளையும் சாகசமாக வாழும் நடுத்தரக் குடும்பத்தின் வாழ்க்கையைக் சித்தரிக்கும்போது பொழுதுபோக்குக்கும், உணர்வுகளுக்கும், நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை. வாழ்வின் சாகசங்களைச் சாதாரணமாக செய்பவர்களே குடும்பஸ்தர்கள் ! சினிமாக்காரன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக S. வினோத்குமார் தயாரிப்பில், ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் (ஜெய் பீம், குட் நைட் ), சான்வே மேகனா, குரு சோமசுந்தரம் (ஜோக்கர் , ஜிகர்தண்டா) இயக்குனர் சுந்தர்ராஜன், தனம் (சிவப்பு மஞ்சள் பச்சை ) பிரசன்னா பாலச்சந்திரன் (மண்டேலா, சேத்துமான்) ஜென்சன் (அயலி ) இணைந்து நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்ட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மணிகண்டன் சமீபத்தில் வெளியான குட் நைட் திரைப்படத்தில் எதார்த்தமாக நடித்து மக்களை கவர்ந்த நிலையில், இத்திரைப்படத்திலும் தன்னுடைய எதார்த்த நடிப்பால் அசத்துவார் என்பதில்…

Read More

18ஆம் வருடத்தில் சண்டக்கோழி ; விஷால் நெகிழ்ச்சி

நடிகர் விஷால் திரையுலகில் ஒரு நடிகராக நுழைந்து 19 வருடங்கள் கடந்து விட்டன. எந்த ஒரு நடிகரும் சினிமாவில் நுழையும்போது அழகான காதல் கதைகள் மூலம் எளிதாக ஒரு வெற்றியை பெற்று விடலாம். ஓரளவு ரசிகர்களையும் கவனிக்க வைக்கலாம். ஆனால் அந்த வெற்றியை தக்கவைத்து திரையுலகில் நிலைத்து நின்று பயணிக்க வேண்டும் என்றால், ரசிகர்கள் மனதில் தங்கள் உருவத்தை அழுத்தமாக பதிய வைக்க வேண்டும். அது நிச்சயமாக ஒரு ஆக்சன் படம் மூலமாக தான் அமையும். நடிகர் விஷாலுக்கு கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக இயக்குநர் லிங்குசாமி மூலமாக கிடைத்த அப்படி ஒரு திருப்புமுனை தான் சண்டக்கோழி திரைப்படம். அந்த படம் அவருக்கு அழகான ஒரு ஆக்சன் பாதையை போட்டுக் கொடுத்தது.. இன்றுவரை அவர் அதில் தனது பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்து வருகிறார். இன்றும் தொலைக்காட்சிகளில் ‘சண்டக்கோழி’…

Read More

பிக்பாஸ் “ஷாரிக் ஹாசன்” நடிப்பில் உருவாகி இருக்கும் நேற்று இந்த நேரம்

கிளாப்-இன் ஃபில்மோடெயின்மென்ட் சார்பில் நவீன் குமார் தயாரிப்பில், சாய் ரோஷன் கே.ஆர். எழுதி, இயக்கி இருக்கும் திரில்லர் திரைப்படம் “நேற்று இந்த நேரம்”. பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ஹரிதா மற்றும் மோனிகா ரமேஷ் என இரண்டு பேர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை நித்தின் ஆதித்யா மற்றும் சாய் ரோஷன் கே.ஆர். இணைந்து எழுதியுள்ளனர். பார்ட்டி கொண்டாட போன இடத்தில் நண்பர்கள் மர்மமான முறையில் காணாமல் போக, அதன் பின்னணியில் நடக்கும் திடுக்கிடும் சம்பவங்களை கிரைம் திரில்லர் பாணியில் உருவாக்கி இருக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டி மற்றும் சென்னையில் நடைபெற்றுள்ளது. கெவின் என் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஷால் மணிவண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை கோவிந்த்.என் மேற்கொண்டுள்ளனர். ”நேற்று இந்த நேரம்” படத்தின்…

Read More

சபாநாயகன் விமர்சனம்

ஒரு ஜாலியான பையனின் காதல் அனுபவங்கள் தான் இந்த சபாநாயகன் திரைப்படம். ச.பா.அரவிந்த் ஆன நாயகன் அசோக் செல்வனுக்கு பள்ளிகாலத்தில் ஒரு காதல், கல்லூரி காலத்தில் ஒரு காதல், சிங்கப்பூரிலிருக்கும் பெறோரைப் பார்க்கச் செல்லும் போது ஒரு காதல், எம்.பி.ஏ படிக்கும் போது ஒரு காதல் என தடுக்கி விழும் இடத்திலெல்லாம் ஒரு காதல் செய்கிறார்.  பார்க்கும் பெண்கள் எல்லோர் மீதும் காதலில் விழும் 2கே கிட்ஸ் கதாபாத்திரம்.  சிரித்துக் கொண்டே ஜாலியாக செய்திருக்கிறார். ஹீரோயின்களாக வரும் கார்த்திகா முரளிதரன், சாந்தினி, மேகா ஆகாஷ் ஆகிய மூவரில் முதல் இடம் மேகாவிற்கு. வந்து செல்வது சில காட்சிகள் மட்டும் தான் என்றாலும் கூட அவர் வந்து செல்லும் காட்சிகள் க்யூட்டான கவிதைகள் போல இருப்பதால் காட்சிகளையும் அந்தக் காதலையும், அதனோடு மேகாவின் அழகையும் ரசிக்க முடிகிறது. செகண்ட்…

Read More

அற்புதமான விஷ்வலுடன் ஹனுமான் டிரைலர்

அதிசயமான காட்சிகளுக்கு சாட்சி- பிரசாந்த் வர்மாவின் அசல் சூப்பர் ஹீரோ திரைப்படமான ‘ஹனுமான்’ படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது! நமது அசல் நாயகன் ஹனுமானின் வீரதீரத்தைக் காண்பதற்காக புனிதமாக காத்திருந்தமைக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆம்..! இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் நடிகர் தேஜா சஜ்ஜாவின் நடிப்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரான ‘ஹனுமான்’ திரைப்படத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னோட்டம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்சின் முதல் படம் இது. அகண்ட பாரதத்தின் இதிகாசத்திலிருந்து ஈர்க்கப்பட்டு இந்த முன்னோட்டத்தின் முதல் காட்சி- அஞ்சனாத்திரி இடம் பெற்றிருப்பது, நம்மை கற்பனை பிரபஞ்சத்திற்குள் அழைத்துச் செல்கிறது. தண்ணீருக்கடியில் நடக்கும் காட்சியில் கதாநாயகன் ஒரு நட்சத்திரம் போல் ஜொலிக்கும் முத்து ஓட்டின் அருகில் செல்வதை காட்சிப்படுத்துகிறது. ‘யதோ தர்ம ததோ ஹனுமா.. யதோ ஹனுமா ததோ ஜெய..’ (எங்கே நீதி…

Read More

பிரபாஸை பிரம்மாண்டப்படுத்தும் நட்பும் துரோகமும் கலந்த “சலார்” டிரைலர்

  ‘கே ஜி எஃப் சீரிஸ்’ போன்ற பிரம்மாண்டமான பிளாக் பஸ்டர் ஹிட்டுகளை வழங்கிய ஹோம்பாலே ஃபிலிம்ஸ் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘சலார்’ படத்தின் இரண்டாவது ட்ரெய்லரை தனித்துவமான பாணியில் வெளியிட்டு, வித்தியாசமான சினிமா அனுபவத்தை வழங்கி உள்ளது. இந்த முன்னோட்டம்- அடக்க இயலாத பிரபாஸுடன் தொடங்குகிறது. இத்தகைய காட்சிகளில் வழங்கப்படும் மயக்கும் அழகியல் காட்சிகள் மற்றும் துடிப்பான சண்டை காட்சிகள் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.‌ இந்தியா முழுவதும் 5000 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் ‘சலார்’- ஒரு சினிமா கொண்டாட்டமாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது. மேலும் சமீபத்திய ட்ரெய்லரில் கான்சார் எனப்படும் உலகத்தையும், பிருத்விராஜ் மற்றும் பிரபாஸ் என்ற இரு நண்பர்களின் புதிரான கதையையும், கவர்ந்திழுக்கும் காட்சிகளுடன் வழங்குகிறது. முரட்டுத்தனமான கதாபாத்திரத்தை சித்தரிக்கும் பிரபாஸ்.. ரசிகர்களை ஆச்சரியப்படுத்துகிறார்.‌ ட்ரெய்லர் ஒரு அழுத்தமான விவரிப்புடன்…

Read More

டிவியிலேயே 300 தடவைக்கு மேல் போட்ட படங்கள் எல்லாம் இப்போது எதற்கு திரையரங்கில். சிறய படங்களுக்கு தியேட்டர் தாருங்கள் – பாடலாசிரியர் பிரியன் !!

தமிழ்த்திரைக்கூடம் தயாரிப்பில், பிரபல பாடலாசிரியர் பிரியன் எழுதி இயக்கி நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “அரணம்”. ஒரு மாறுபட்ட ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில்.. பாடலாசிரியர் பாலா பேசியதாவது… இது எனது முதல் திரைப்படப் பாடல், சிறு வயதிலிருந்து பாடலாசிரியர் ஆக வேண்டும் என்பது கனவு, எனது ஆசான் நாயகனாக அறிமுகமாகும் படத்தில் நானும் பாடலாசிரியராக அறிமுகமாவது மகிழ்ச்சி. காத்துல என்ன தூத்துது எனும் பாடல் அனைவரையும் கவரும், இசையமைப்பாளர் ராஜன் மாதவிற்கு நன்றி. தமிழ் திரைப்படக்கூடத்திற்கு என் நன்றிகள் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன், அனைவருக்கும் நன்றி. பாடலாசிரியர் சஹானா பேசியதாவது.. அரணம் படத்தில் ஆரிராரோ எனும் பாடல் தான் என் முதல் பாடல்…

Read More

ஆயிரம் பொற்காசுகள் விமர்சனம் :

  முழுக்க முழுக்க பார்வையாளர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தில், கதை, திரைக்கதை, கதாபாத்திர வடிவமைப்பு இப்படி எதைப் பற்றியும் பெரிதாக கவலைப்படாமல், நகைச்சுவையை மட்டுமே மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “ஆயிரம் பொற்காசுகள்”.  இப்படம் அதன் நோக்கமான நகைச்சுவையை நமக்குப் பரிசளித்திருக்கிறதா…?  இல்லையா…? என்பதை பார்ப்போம். “ஆயிரம் பொற்காசுகள்” அடங்கிய ஒரு புதையல் ஒன்று கிடைக்கிறது. அதை அரசாங்கத்திற்கு தெரியாமல் பங்கு பிரித்துக் கொள்வதற்கான போராட்டமே “ஆயிரம் பொற்காசுகள்” திரைப்படத்தின் ஒன்லைன். அந்த ஆயிரம் பொற்காசுகள் யாருக்கு கிடைக்கிறது…? எப்படி கிடைக்கிறது..? அதை ஆண்டு அனுபவிக்க நினைக்கும் மைய கதாபாத்திரங்களுக்கு எப்படி எந்த ரூபத்தில் எல்லாம் சிக்கல் வருகிறது…? பங்கு பிரிப்பதில் ஏற்படும் பிரச்சனைகளும், அதன் இறுதிகட்டத் தீர்வையும் இப்படத்தின் திரைக்கதை விளக்குகிறது. ஆரம்பத்திலேயே சொன்னது மாதிரி சிரிக்க வைக்க வேண்டும் என்பது…

Read More

கண்ணகி விமர்சனம்

  தன் கணவனால் பல்வேறு அவலங்களுக்கு ஆனாலும் கூட கணவனுக்காக கடைசி வரை நின்றவள் அந்தக் கால கண்ணகி. இந்த காலத்தில் திருமண உறவுக்கு காத்திருக்கும் பெண்ணோ, திருமண பந்தம் சரியில்லாமல் விவாகரத்து கோரும் பெண்ணோ, திருமணமோ காதலோ தனக்கு செட் ஆகாது என்று லிவிங்-கில் வாழும் பெண்ணோ, அல்லது காதலனோடு லிவிங்-கில் இருக்கும் பெண்ணோ, யாராக இருந்தாலும் இன்னும் ஆண்களை நம்பி வாழ வேண்டிய கலியுக கண்ணகியாகத்தான் இருக்க வேண்டியிருக்கிறது என்பதே “கண்ணகி” திரைப்படத்தின் கதை. பெண்களுக்கு திருமணமே பாதுகாப்பைத் தரும் என்று சொல்லி  சொல்லி வளர்க்கப்படும் கலை (அம்மு அபிராமி), திருமணம் தனக்கான பாதுகாப்பை தராமல் விவாகரத்து கொடுத்து தன்னை வெளித்தள்ள முயலும் போது செய்வதறியாது திகைக்கும் நேத்ரா (வித்யா பிரதீப்), காதலும் வேண்டாம் கல்யாணமும் வேண்டாம் லிவிங்-கில் இருப்போம் என்று வாழும்  நதி,…

Read More