ராட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா-வில் கார்த்திக் சுப்புராஜின் “ஜிகர்த்ண்டா டபுள் எக்ஸ்”

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் பேனரில் கார்த்திகேயன் சந்தானம் தயாரித்த ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ இந்திய ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டுகளை பெற்றுள்ள‌ நிலையில், உலகளாவிய கவனத்தை ஈர்க்க தற்போது தயாராகி வருகிறது. ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப் படம், பெருமை வாய்ந்த ராட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் (IFFR) டச்சு பிரீமியர் பிரிவில் திரையிடப்படுவதற்காக‌ தேர்வு செய்யப்பட்டுள்ளது. ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ 2024 ஜனவரி மாதத்தில் ராட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் லைம்லைட் பிரிவின் கீழ் திரையிடப்படுவ‌து தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை IFFR குழு வெளியிட்டுள்ளது. உலகளவில் நன்கு அறியப்பட்ட மற்றும் புகழ்பெற்ற திரைப்பட விழாவான ராட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் அமைப்பாளர்கள் அங்கு திரையிடப்படும் படங்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் குறிப்பாக‌ இருந்து,…

Read More

ஃபைட் க்ளப் விமர்சனம்

  வடசென்னை களம், கஞ்சா போதைப் பொருள் கடத்தல், வளர்ச்சிக்கு முயலும் இளைஞர், அவருக்கு உதவும் வடசென்னை முக்கியப் புள்ளி, துரோகம், பழிவாங்கல், கேங்க், கேங்க்வார் சண்டை இவைகளின் தொகுப்பே ஃபைட் க்ளப். வட சென்னைக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அங்க அடையாளத்தில் இருந்து சற்றும் பிரளாத மற்றுமொரு தமிழ் சினிமா. வடசென்னை என்றாலே போதை கலாச்சாரம், கேங்க் வார், சண்டை, அடிதடி வம்புக்கு பயப்படாத இளைஞர்கள், கால் பந்தாட்டம், கேரம், மேற்கத்திய நடனம், நட்பு, துரோகம், பழி வாங்கல் என்று ஏற்கனவே போட்டு வைக்கப்பட்டிருக்கும் கெட்டியான எந்த மழைக்கும் எந்த நூற்றாண்டுக்கும் பெயர்ந்தே போகாத தார் சாலையில்  ஓடவிடப்பட்டிருக்கும் புதிய பேருந்து தான் “ஃபைட் க்ளப்”. எங்களை குற்றவாளிகளாகவே சித்தரிக்காதீர்கள்; பிற பகுதி மக்கள் எங்களை பார்த்தாலே பழகத் தயங்குகிறார்கள்; ஒதுங்கிப் போகிறார்கள், எங்களிடமும் வாழ்க்கை இருக்கிறது, எந்த…

Read More