‘பேட் பாய்ஸ்’ பட வரிசையில் நான்காவது பாகமான இது, ‘பேட் பாய்ஸ் ஃபார் லைஃப் (2020)’ படத்தின் தொடர்ச்சியாகும். ஒரு போலீஸ் அதிரடி நகைச்சுவை படமான பேட் பாய்ஸ் (1995), ‘பேட் பாய்ஸ் 2 (2023)’ படத்திற்கு வழி வகுத்தது (2003). இந்தப் புகழ்பெற்ற பட வரிசையின் முதல் 2 படங்களை மைக்கேல் பே இயக்கியிருந்தாலும், 3 ஆவது படத்தை Adil & Bilall இயக்கியுள்ளனர். இந்த 4 ஆவது படத்தையும் அதே இரட்டையர்கள் இயக்கியுள்ளனர்! 4 மடங்கு அதிரடி மற்றும் 4 மடங்கு பொழுதுபோக்கு என்ற வாக்குறுதியுடன், இந்தியாவில் ஒரு நாள் முன்னதாகவே, ஜூன் 6 ஆம் தேதி படம் வெளியிடப்படுவதால் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியடையலாம். உலக சினிமா ரசிகர்களின் விருப்பத்துக்குரிய ‘பேட் பாய்ஸ்’ அவர்களின் ட்ரேட் மார்க்கான, இருக்கை நுனியில் அமர வைக்கும் அதகளமான…
Read MoreDay: June 8, 2024
கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற வி.ஐ.டி பல்கலைக்கழக நிறுவனர்
இந்தியக் கல்வி வளர்ச்சியில் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் வேந்தருமான டாக்டர் கோ.விஸ்வநாதன் ஐயா அவர்கள் ஆற்றிய சேவையைப் பாராட்டி அமெரிக்காவின் பிங்ஹாம்டன் பல்கலைக்கழகம், அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. அதற்கு பாராட்டுத் தெரிவிக்கும் வகையில் வேலூரில் நடைபெற்ற விழாவில் நானும் பங்கேற்றேன். கல்வித்துறையில் எனக்கு ஆசானாக விளங்கும் ஐயா அவர்கள் ஆற்றிய கல்விச்சேவை பல ஆயிரக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்கியது, உயர் கல்வியின் முக்கியத்துவத்தை மக்களிடம் போதித்தது. இந்தியாவின் பல மூலைகளில் இருந்தும் இங்கு கல்வி பயில வந்த மாணவர்களின் வாழ்க்கையை மாற்றியது. இத்தகைய மகத்தான மனிதரின் பாராட்டு நிகழ்வில் பங்கேற்றது எனக்கு மிகுந்த மனநிறைவை அளித்தது.
Read More