UI (உய்) – திரை விமர்சனம்

உலகளாவிய நுண்ணறிவு என்ற பொருள் படும் யுனிவர்சல் இன்டெலிஜென்ஸ் என்பதன் சுருக்கமே இந்த ui.

கன்னட திரை உலகின் முன்னணி நடிகர் உபேந்திரா எழுதி இயக்கியதோடு நாயகனாகவும் நடித்திருக்கிறார். அதுவும் இரட்டை வேடத்தில். படத்திலும் அவர் இயக்குனராகவே வருகிறார். அவரது இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஒன்றை பார்க்கும் ரசிகர்களில் பலர் பித்து பிடித்தது போல் ஆகிறார்கள். அதுவரை கோழையாக இருந்த சிலர் தைரியமான முடிவுகள் எடுக்கிறார்கள்.

இதனால் இந்த படத்தை ஒரு தரப்பு கொண்டாடி தீர்க்க, மற்றொரு தரப்போ படத்தை தடை செய்தாக வேண்டும் என்று போராடுகிறது. பிரபல திரைப்பட விமர்சகர் ஒருவர் மூன்று முறை அந்த படத்தை பார்த்த பிறகும் எப்படி விமர்சனம் எழுதுவது என்று தடுமாறுகிறார். அதனால் அவர் அந்தப் படத்தை இயக்கிய உபேந்திராவையே சந்திக்க புறப்படுகிறார். அந்த சந்திப்பில் அவரு க்கு கிடைத்த படம் தொடர்பான விளக்கம் என்ன என்பது திரை இதுவரை காணாத புது வித கதைக்களம்

சத்யா, கல்கி பகவான் என இரு இடங்களில் குபேந்திரா. ஒன்றில் மென்மை, இன்னொன்றில் மிரட்டல் என இரு இடங்களிலும் வித்தியாசம் காட்டி இருக்கிறார். குறிப்பாக அந்த கல்கி பகவான் வேடம் மிரட்டலோடு பல பொது விஷயங்களையும் சொல்லி செல்கிறது. நாயகியாக ரீஷ்மா நானய்யா நாயகனை ஒரு தலையாக காதலிக்கும் இடங்கள் ரசனைக் களஞ்சியம். அழகான ஒரு ஆட்டமும் போடுகிறார்.
திரைப்பட விமர்சகராக முரளி சர்மா, உபேந்திரா தந்தையாக அச்யுத்குமார், பதவிக்கு தவமிருக்கும் ஓம் சாய் பிரகாஷ் கவனிக்கத்தக்க நடிப்பில் கவர்கிறார்கள்.

பி. அஜினீஷ் லோகநாத் இசையில் பாடல்கள் ரசிகர்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கின்றன. ஒளிப்பதிவாளர் வேணுகோபால் தனது கேமரா மூலம் காட்சிகளில் மாயாஜாலம் நிகழ்த்தி இருக்கிறார். குபேந்திரா எழுதி இயக்கிஇருக்கிறார். நாட்டில் ஒழுங்கான சாலைகள் இல்லை. ஆனால் விண்வெளி ஆய்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து கோடிகளை ஒதுக்குவது, மக்களுக்கு போதிய உணவு இல்லை என்றாலும் ஆயுதங்களை வாங்கி குவிப்பது, இயற்கை வளங்கள் செல்வாக்கு பெற்றவர்களால் சூறையாடப்படுவது போன்றவற்றில் ஒரு குடிமகனின் கோபத்தையும் திரை மொழியாக விவரித்த விதத்தில் படம் முக்கியத்துவம் பெற்று விடுகிறது.

இந்த u i சுயநல அரசியல்வாதிகளை நோக்கி சுழலும் சவுக்கு.

Related posts

Leave a Comment