தமிழ் சினிமாவின் முதல் திருநங்கை இயக்குனராக சம்யுக்தா விஜயன் இயக்கி நடித்துள்ள ‘நீல நிறச் சூரியன்’ ; அக்-4ல் தமிழகமெங்கும் வெளியீடு திருநங்கை சம்யுக்தா விஜயன் இயக்கி நடித்து வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் ‘நீல நிறச் சூரியன்’ (Blue Sunshine). வரும் அக்டோபர் 4 ஆம் தேதி தமிழகமெங்கும் xforia Igene நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது.. இப்படத்தின் சிறப்பம்சமே தமிழ் சினிமாவில் முதன்முறையாக சம்யுக்தா விஜயன் என்கிற ஒரு திருநங்கை இயக்கி நடித்துள்ள முதல் திரைப்படம் என்பது தான். அது மட்டுமில்லாமல், IFFI -23, மற்றும் பல உலக திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று, உலக சினிமா ரசிகர்கள் மட்டுமில்லாமல் நல்ல சினிமாக்களை விரும்பும் அனைவரும் பாராட்டிய படமாக இது உருவாகி இருக்கிறது.. இப்படத்தின் சிறப்பு காட்சிகளில் கலந்து கொண்ட திரைப்பிரபலங்களின் ஏகோபித்த பாராட்டுகளையும்…
Read MoreDay: September 29, 2024
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் மாண்புமிகு உதயநிதி துணை முதல்வருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் – நாசர்,தலைவர்
பேரன்பிற்கும் மரியாதைக்குரிய தமிழக துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம், தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினருமான தாங்கள் தமிழக அமைச்சரவையில் துணை முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள தங்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக உள்ளார்ந்த மகிழ்ச்சியையும், மனமார்ந்த பாராட்டுகளையும் மிகுந்த பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், இளைய சமுதாயத்திற்கு ஒரு விடிவெள்ளியாக ஒளிரவும் நம் தமிழகத்தை உலகமே உற்று நோக்கும் வகையில் சீரிய முறையில் தங்களின் பணி சிறக்க வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். நன்றி, தங்கள் உண்மையுடனும், பேரன்புடனும் (M.நாசர்) தலைவர்
Read More