BTG Universal, ஜெயம் ரவி கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படங்கள்  !!

தமிழின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி, தயாரிப்பு துறையில் கோலோச்சி வரும் BTG Universal நிறுவனத்துடன் இணைந்து இரண்டு புதிய படங்களில் பணியாற்றவுள்ளார். பிரம்மாண்டமான கமர்ஷியல் படங்களாக உருவாகவுள்ள, புதிய படைப்புகள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். தமிழ் திரையுலகில் கால் பதித்து பல வித்தியாசமான படங்களை பிரம்மாண்டமாக தயாரித்து வரும் BTG Universal நிறுவனம், 20 வருடங்களை கடந்து தமிழ் சினிமாவில் ஜொலிக்கும் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவியுடன் கூட்டணி அமைத்துள்ளது. டேட்டா பிரைவசி ஸ்பேஸ், சைபர் தடயவியல் உட்பட மென்பொருள் துறையில் உலகளாவிய  அளவில் ஜாம்பவானாக கோலோச்சும் திரு.பாபி பாலச்சந்திரன்,  BTG Universal நிறுவனம்  மூலம் தமிழ் திரைத்துறையில் கால் பதித்துள்ளார். பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் தலைமை நிர்வாக இயக்குநராக பணியாற்றிய திரு டாக்டர் M.மனோஜ் பெனோ தற்போது…

Read More

பவர் ஸ்டாரின் புதுவிதமான லட்டு

லட்டுவை வைத்து சமீப காலமாக பல பிரச்சனைகள் கிளம்பிய வண்ணம் உள்ளது. 2013 ல் கண்ணா லட்டு திங்க ஆசையா என கேட்ட பவர் ஸ்டார் தற்போது ஒரு புது விதமான லட்டு ஒன்றை தனது ரசிகர்களுக்காக விருந்தளிக்க உள்ளார். தற்போது பவர் ஸ்டார் அவரது இயக்கத்தில் உருவாக உள்ள புது படத்தின் பெயர் “பவர் லட்டு” என பெயர் வைத்துள்ளார். இந்த படத்தை மாபெரும் பொருட்செலவில் L V Creations சார்பில் டாக்டர் லோகு தயாரிக்கின்றார், இவர் இதற்க்கு முன்னதாக பவர் ஸ்டார் நடித்த “முன்தினம்” தயாரித்து இயக்கிய அத்திரைப்படம் மிக விரைவில் வெளிவர உள்ளது. இப்படத்திற்கு கதை திரைக்கதை எழுதியது மனோஜ் கார்த்திக் காமராஜு இவர் வைஜெயந்தி ஐ பி எஸ் , ப்ருஸ்ட்லீ ரிடர்ன்ஸ் படங்களின் இயக்குனர் ஆவார் மற்றும் வினோத் குமார்…

Read More